பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யடைந்து சில உத்யோகங்களில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை தெரிந்தெடுக்கும் எண்ணம் கவர்ன்மெண்டாருக்கு இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களுடைய பெயர்களையுங் கொடுப்போம். அப்படி கொடுக்கும்படியான பெயர்கள் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்வதுமின்றி, எவ்விதமாக பேச வேண்டும் என்னும் பகுத்தறிவும் இருக்குமென்பதற்கு யாதொரு ஆட்சேபணையுமில்லை. மெட்ராஸ் பிரசிடென்சியில் ஜாதிபேதமற்ற திராவிடர்கள் அநேகமாக இருக்கிறபடியால் அவர்களுக்குள்ளக் குறைகளை சங்கத்தில் விளக்குவதற்கு அவர்களுடைய மரபிலேயே ஒரு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் மெம்பர் இருக்க வேண்டியது அவசியமென்பது நமது கருத்து.

இந்த விஷயத்தைப் பற்றி 1908ம் வருடம் கவர்னர்வர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் எலக் ஷன் சிஷ்டத்தைப் பற்றி அதிகமான விளம்பரமிருந்தபடியால் இக்குலத்தாரைப் பற்றி பேசுவதற்கு ஒரு யூரோப்பியன் அல்லது யுரோஷிய கணவானை நியமனம் செய்யும்படி கேட்டுக் கெள்ளப் பட்டது.

இப்போது கவர்னர்கள் யுரேஷியன் வகுப்பையும், இந்தியன் கிறிஸ்டியன் வகுப்பையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக அக்கூட்டத்தார்களில் இருவரை நாமிநேட் செய்திருக்கிறதாகத் தெரிகிறபடியால் இக்குலத்திலிருந்தும் ஒருவரை நாமினேட் பண்ணுவதில் மற்ற இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும் யாதொரு ஆட்சேபனை செய்வதற்கு இடமில்லையென்பது நம்முடைய பூர்த்தியான அபிப்பிராயமானபடியால் நமது கவர்னர் கனந்தங்கிய ஸ்ர் ஆர்த்தர் லாலி அவர்கள் அன்பு கூர்ந்து ஏழை குடிகளிலிருந்து ஒருவரை நாமிநேட் செய்வாரென்பது நம்முடைய தாழ்மையான கோரிக்கை" (1:222)

கவுன்சில் நியமனங்களில் கல்வி கற்றவர்களையே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை சாதி இந்துக்கள் தொடர்ந்து முன்வைத்தனர். இப்படி முன்வைப்பதற்கு காரணமிருந்தது. தீண்டத்தகாத மக்களில் எம்.ஏ. பி.ஏ. பட்டம் பெற்றவருள் குறைவு எனவே இக்கோரிக்கையின் மூலம் அவர்களை விலக்கி வைக்க முடியும் என அவர்கள் கருதினார். இந்த போக்கை கடுமையாக எதிர்த்து

கௌதம சன்னா / 60