பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரபுவும், கவர்னர் ஆர்த்தர் லாலி பிரபுவுமென்றே இந்திர தேசப் பூர்வகுடிகள் கொண்டாடுவர்" (1:268)

என தம் ஆதங்கத்தை வெளியிட்டார். ஆனால் இருவருமே தமக்கு வந்த மனுவின் மீது விசாரணை செய்துவிட்டு அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மிண்டோவிற்கு பிறகு ஆர்டிஞ்ச் பிரபு இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என பண்டிதர் எதிர் பார்த்து தமது வேண்டுகோளை பத்திரிக்கை மூலம் வெளியிட்டு வந்தார் (9.11.1910)

இக்காலகட்டத்தில் பண்டிதர் இடஒதுக்கீட்டினை நிரப்ப வேண்டிய துறைகளாக அரசுப்பணி, கல்வி, மாகாண சட்டசபை, மற்றும் நிலம், இந்த நான்கு அம்சம் தான் பிரதானமானது. என வலியுறுத்தி வந்ததோடு, நிலத்தை எப்படி பங்கிட வேண்டும் என்பது குறித்து அவர் கூடுதல் கவனத்தை செலுத்த முனைந்தார்.

1890களிலிருந்து பண்டிதர் அரசியல் செயல் திட்டத்தில் நிலம் பெறுவதும் இருந்து வந்தது என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். நிலம் வைத்துக் கொண்டு உழைக்காமல் வீணாக சோம்பித் திரியும் சாதி இந்துக்களுக்கு நிலத்தைக் கொடுக்காமல், உழைக்கும் ஏழைக் குடிகளுக்கு நிலத்தை கொடுப்பதின் மூலம் விவசாயத்தை பெருக்கி வளமாக்க முடியும் என்பது பண்டிதர் யோசனை. (1910 அக்டோபர் 19) இந்து கருத்துக்களை விளக்கும் முத்தாய்ப்பை இன்னொரு தருணத்தில் வரிசைப்படுத்தினார். 16-ஜனவரி 19llம் நாள் தமிழனில்;

"வாசித்து பட்டம் பெற்றவர்களுக்கே இராஜாங்க உத்யோகங் கொடுக்கப் படுமென்னும் நிபந்தனையால் தேசத்திற்கு கால்பாக சுகமும், முக்கால்பாக துக்கமுண்டாகின்றபடியால் அத்தகைய நிபந்தனைகளை அகற்றி கருணை நிறைந்த ஆளுகைக்குட்பட்ட சகல குடிகளும் சுகம்பெற வேண்டுமென்பதையே நாடியுள்ளோமாதலின் வித்யா விஷயத்திலும், விவசாய விஷயத்திலும், வியாபார விஷயத்திலும், இராஜாங்க உத்யோக விஷயத்திலும் சமரச பாதை அளிப்பதே ஆனந்தமாகும் (2:319)

என விளக்கினார். பண்டிதரின் கோரிக்கைகளும் செயல்பாடுகளும் மெச்சத் தகுந்த அளவில் நடந்து வந்த போதிலும் அரசிடமிருந்து எதிர்பார்க்கும் அளவிற்கு சாதகமான பதில்களைப் பெற முடியவில்லை, இந்நிலையில் 1912ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் சட்டசபையில் சில

கௌதம சன்னா / 62