பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாறுதல்கள் வரும் என பரவலான பேச்சிருந்தது. அதேவேளை சட்டசபையில் உறுப்பினர்களாயிருந்தவர்களைப் பற்றின அதிருப்தியும் உருவாகியிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த ஆலோசனையை தம் கொள்கைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பண்டிதர் முனைந்தார். சட்டசபையில் இருக்கும் உறுப்பினர்கள் பெரும்பாலோர் பேச திராணியற்று இருந்தனர் இவர்களை பண்டிதர் 'மெளன. மெம்பர்கள்" என்று வர்ணித்தார். அந்த மெளன மெம்பர்கள் ஏன் மெளனமாய் சபையில் வீற்றிருக்கிறார்கள் என்பதற்கு காரணமாக

- அவர்களுக்கு ஆங்கில மொழி சரிவர தெரியாதது.

- மக்கள் பிரச்சினை பற்றி அறிமுகம் இல்லாதது என இரண்டு காரணத்தை கட்டிக் காட்டி இதற்கு தீர்வாக மொழி பெயர்ப்பு உதவி வேண்டுமென கூறினார்.

"சாதிபேதமற்ற ஏழைக் குடிகளாய் ஆறுகோடி மக்களுக்கென்று ஓர் சட்டசபை மெம்பர் இருந்தே தீரல் வேண்டும்.

அதனுடன் சட்டசபையில் தமிழழையும், தெலுங்கையும் மொழி பெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும் கன்னடத்தையும் மலையாளத்தையும் மொழிபெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும்.

துலுக்கையும், மராஷ்டத்தையும் மொழிபெயர்க்கும் ஒர் டிரான்ஸ்லேட்டரும் இருப்பார்களாயின் சகல பாஷைக் குடிகளின் கஷ்ட நஷ்டங்கள் யாவும் இராஜாங்கத்திற்கு விளங்கிப்போம், மக்கள் சுகமடைவார்கள் (I:413)

பண்டிதரின் இடஒதுக்கீடு கோரிக்கைகள் இப்படி கூர்மைடைந்து, துல்லியமடைந்து நிலைத்தது. மட்டுமின்றி, அவரது இறுதிக்காலம் 1914 வரை இக்கருத்துக்களை அவர் பரப்பி வந்தார். அவை எல்லாவற்றையும் தொகுத்தளிப்பது என்பது இனி தேவையற்றது. ஏனெனில் 1912ம் ஆண்டு கடைசியிலேயே இடஒதுக்கீடு பற்றின அவரது கருத்துக்கள்

முழுமையடைந்து விட்டன என்பதால்தான், இனி மீதமிருப்பது அவரது கருத்துக்களை ஒப்பிட்டு ஆய்வதின் மூலம் அவரது கொள்கையின், கொடையின் முக்கியத்துவத்தை, கால கட்ட முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி நிர்ணயிப்பதில் ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கையை இச் சமூகத்திற்கு வழங்கிய புரட்சிகர முன்னோடியாய் எப்படி மிளிர்கிறார் என்பதை அறிய முடியும். எனவே வாசகரை ஒப்பீட்டாய் தளத்திற்கு அழைக்கிறேன்.

63 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை