பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
இடைவெளி . . .

இனி, இந்த வரலாற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டும். வழக்கமாக வகுப்பாரி உரிமை எனும் கோட்பாடு தோன்றிய காலத்தைக் குறித்து இந்திய வரலாற்றை குறிப்பாக தமிழக வரலாற்றை அறிந்தவர்கள் அக்கொள்கை பார்ப்பனரல்லாதாரின் இயக்கத்தினால் விளைந்தது என சொல்கிறார்கள்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் வகுப்புரிமை தோன்றிய வரலாற்றைக் குறித்து கூறும்போது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கோருவதே பார்ப்பனரல்லாத சமூகங்களின் (ஜஸ்டிஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும், வகுப்புவாதி பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதே பார்ப்பன சமூக (காங்கிரஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும் இருந்து வருகின்றது என்பதை அநேக ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லலாம்.

இன்று இந்நாட்டின் மதங்களின் பேரால் உள்ள இந்து, முஸ்லீம், சீக்கிய, கிறித்துவ ஸ்தாபனங்களும் வகுப்புகளின் பேரால் உள்ள மேல்சாதி, நடுசாதி, கீழ்சாதி என சொல்லப்படும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப் பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையே கண்ணாகக் கொண்டு கிளர்ச்சிகள் செய்வதை யாரும் மறுக்க முடியாது (குடியரசு - தலையங்கம் - 19, 1935)

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. (குடியரசு - 23.6.1935)

"நம்முடைய நாட்டிலே 1916, 1917ல் தான் வகுப்புவாரி கோரிக்கை ஆரம்பமானது. என்றாலுங்கூட வட நாட்டில் வகுப்பு வாரி உரிமை முழக்கம் 1900லிருந்தே எழுப்பப்பட்டது. தங்களு டைய வகுப்பின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு தங்களுக்கு விகிதாச்சாரப்படி எல்லாத் துறைகளிலேயும் சேர்க்கப்பட

கௌதம சன்னா / 64