பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டும் என்று 1900லிருந்தே முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து வந்தார்கள். நம்மில் பலருக்கு இந்த சங்கதி தெரியாதிருந்திருக்கலாம். கொஞ்சம் வயதானவர்களுக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். (விடுதலை 158.1950).

பெரியார் அவர்களின் இந்தக் கருத்துக்களை மதிப்பிடுவது நோக்கமல்ல, ஆனால் ஒரு வரலாற்று கட்டத்தை அது தோன்றிய விதத்தை அவர் கூறியதைக் கொண்டு அவருக்குப் பின் வந்தவர்கள், அல்லது திராவிட இயக்க வரலாற்றை எழுதிய யாரும் விதிவிலக்கின்றி தமிழகத்தில் வகுப்புவாரி உரிமை எனும் கோட்பாடு தோன்றிய காலத்தை 1916 என்றே குறிப்பிடுகின்றனர். திராவிடர் கழகத்தின் தலைவரான கி. வீரமணி எழுதிய வகுப்புரிமை வரலாறு எனும் நூலில்கூட இதேதான் குறிப்பிடப் பட்டுள்ளது. இதைக் குறிப்பிடும் ஏராளமான நூல்கள் இருக்கிறது. அவைகளிலிருந்து ஆதாரங்களைத் தருவது சொல்வதை திரும்ப சொல்வது போலிருக்கும்.

பார்ப்பனரல்லாதார் என்ற நிலைபாடு இடைநிலை சாதிகளிடமிருந்து 1909ம் ஆண்டு இறுதியிலேயே முளைவிடத் தொடங்கியது என்பதும், தெளிவற்ற நிலையிலே பிரச்சாரம் நடந்தது என்பதும் திராவிடர் இயக்க அறிவாளிகள். அறியாத செய்தி 1909ம் ஆண்டிலே இந்த பார்ப்பனரல்லாத இயக்கத்தை நோக்கி தன் விமர்சனத்தை பண்டிதர் முன்வைத்தார். இந்த பார்ப்பனரல்லாதார் என்போர்கள் பார்ப்பனரை தவிர்த்து அவர்களது சாமிகளையும், சாதிகளையும் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கமா அல்லது இதையெல்லாம் விட்டொழித்த இயக்கமா என கேட்டிருந்தார். இதே கருத்தை பிற்காலத்தில் அம்பேத்கர் முன்வைத்து, பார்ப்பனரல்லாதார் இயக்கம் வீழ்ந்து போனதற்கு அது பார்ப்பனியத்தை விட்டொழிக்காதது தான் என்று அவர் கூறியது எதேச்சையானதல்ல. எனவே எது எப்படி இருந்தபோதலும் திராவிட இயக்க அறிஞர்கள் ஆய்வுபடி:

20-11-1916ல் நடைபெற்ற பிராமணரல்லாதார் மாநாட்டை தொடர்ந்து, தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற கூட்டு வியாபாரிகள் சங்கம், தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற கட்சி தோற்றுவிக்கப் பட்டது. இந்த சங்கம் பிராமணரல்லாதார் அறிக்கையை (Non Braminan Manifesto)வெளியிட்டது. அந்த அறிக்கையில் பார்ப்பனரல்லாதாருக்கான விகிதாச்சார கோரிக்கைகள் இருந்த பிரிவுகள் வருமாறு.

1. அரசாங்க அலுவல்கள், 2 பொது நிறுவனங்கள் (நகரவை,

65 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை