பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாவட்ட கழகம், சட்டசபை, பல்கலை செனட் மற்றும் பிற) மற்றும் 3. கல்வித்துறை ஆகிய துறைகளில் பிரதிநித்துவத்தை கோரியது. அந்த பிரநிதித்துவமானது

"அரசியல் அமைப்பு எப்படி இருக்க வேண்டுமென்றால் உண்மையான உரிமைகள் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனத்தினருக்கும் வகுப்பினருக்கும் அவரவர்களுக்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும், தகுதியையும் எண்ணிக்கையையும் மனதிற் கொண்டு அவரவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்க வேண்டும் (1992–25–32)

(Indian has earned the right to demand that the basis of her constitution should be broadened and deepened. That her sons representively every class, caste, and community according to their acknowledged positions in the country and their respective numerical strength." (1992–23)

நீதி கட்சி தன்னுடைய கொள்கையை முன் வைத்து அதை நடைமுறைப்படுத்த எடுத்துக் கொண்ட இடைப்பட்ட காலத்தில் அரசுக்கு கோரிக்கைகளை விட்ட வண்ணம் இருந்தது. 1920ல் நீதிகட்சி ஆட்சி பிடித்த பிறகு தனது விகிதாச்சார கொள்கையை அறிவித்தது. 1922ல் அறிவிக்கப்பட்ட வகுப்புவாரி ஆணையின் படி;

அரசு பணிகளில் மொத்தம் 12 இடங்கள் என்றால், அதில்

பார்ப்பனரல்லாதார் (இந்துக்கள்) 5 இடங்கள்

பார்ப்பனர்கள் 2 இடங்கள்

முகமதியர் 2 இடங்கள்

ஐரோப்பியர் உட்பட கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர் 2 இடங்கள்

தாழ்த்தப்பட்டவர்கள் 1 இடம்

இந்த 12 இடங்களையும் சுற்றுமுறைபடி கடைபிடிக்க வேண்டும்.

1. பார்ப்பனரல்லாத இந்து

2. முகமதியர்

3. பார்ப்பனரல்லாத இந்து

4. ஆங்கிலேயர் இந்தியர் அல்லது கிறிஸ்தவர்

கௌதம சன்னா / 66