பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. பார்ப்பனர்.

6. பார்ப்பனரல்லாத இந்து

7. மற்றவர்கள் (தாழ்த்தப்பட்டவர் உட்பட)

8. பார்ப்பனரல்லாத இந்து.

9. முகமதியர்

10. பார்ப்பனரல்லாத இந்து.

11. ஆங்கிலோ இந்தியர் அல்லது இந்திய கிறிஸ்தவர்.

12. பார்ப்பனர்.

இந்த விகிதாச்சார ஆணையை, அதன் செயல்படுத்தும் முறையையும் வாசகர்கள் கவனிப்புடன் படிக்க வேண்டும். நீதிகட்சி மக்கள் தொகை அடிப்படையில் கேட்டதற்கும், அது நடைமுறைப் படுத்தியதற்கும் இடையிலுள்ள இடைவெளி யாருடைய கவனத்தையும் கவரும்.

எனினும் நம்முடைய நோக்கம் வகுப்புரிமை, இடஒதுக்கீடு, விகிதாச்சார உரிமை எனும் சமூக நீதிக் கொள்கையின் தோற்றுவாயை அறிவதுதான். பார்ப்பனரல்லாதாரைப் பொருத்தவரையில் அது 1916ல் தோன்றி 1922ல் வடிவம் பெற்று விட்டது என்பதை மட்டும் இங்கும் போதும், பிறகு.

67 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை