பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னீடு




இந்திய துணைகண்ட வரலாற்றில் புதைக்கப்பட்ட வரலாற்று உண்மைச் சம்பவங்கள் ஒரு சிறு நூலாய் உங்கள் கைகளில் இப்போது வரலாற்று நேர்மையுள்ளவர்ளுக்கு நானமும் ஆச்சர்யமும், மோசடி பேர்வழிகளுக்கு கோபமும் வெறுப்பும் கிளப்பக் கூடிய அந்த கடந்தகால பக்கங்கள் நிகழ்கால கவனத்தை கோரி நிற்கின்றன. பண்டிதர் - தமிழனின் முகமாக, அடையாளமாக மட்டுமின்றி துணை கண்டத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் முன்னோடியாக செயல்பட்டவரை, வாழ்ந்தவரை ஏதோ அகழ்வாராய்ச்சி செய்து மீட்டுருவாக்கம் செய்யும் அவலநிலையை இந்த சமூகம் வரித்துக் கொண்டதென்றால் இந்த சாதி இந்து சமூகத்தின் யோக்கியதையை மெச்சுவதற்கு என்ன இருக்கிறது.

இந்த சாதி இந்து சமூகம் முற்போக்காய் இருந்தாலும், சனாதனமாய் இருந்தாலும் தலித் மக்கள் வரலாற்று விசயத்தில் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்திய துணைகண்ட வரலாற்றில் விகிதாச்சார உரிமை என்றும் இடஒதுக்கீடு கொள்கை என்றும் சமூகநீதி என்றும் அழைக்கப்படுவதின் அத்தனைப் பரிமாணங்களின் அடிப்படை யையும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வகுத்து இந்த சமூகத்திற்கு பண்டிதர் அளித்தார் எனில் அதை கொடை என சொல்லாமல் எப்படி சொல்வது.

ஆனால் அப்படி ஒரு வரலாற்றுக் கட்டமே நடக்கவில்லை என்பதுபோல இந்திய இடஒதுக்கீடு வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஒரு மாற்று மருந்தாக பண்டிதரின் கொடை இருக்கும்.

1890க்கும் - 1914க்கு இடைபட்ட காலத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களுடேயும், பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தங்களின் பின்னணியோடும், எல்லாவற்றிற்கும் அன்றைய சாதி இந்து சமூகம் கொடுத்த கடும் சமூக, சாதிய, அரசியல் நெருக்கடிகளின் தாக்கத்தாலும், சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்ற

6 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை