பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நோக்கத்தினாலும் பண்டிதரின் சமூகநீதி அடிப்படைகள் உருவாயின. பண்டிதரின் சமூகநீதி தலித்துக்கோ அல்லது தலித்தல்லாதாருக்குமான சமூக நீதியல்ல. அது சகல இன மக்களுக்குமான சமூக நீதி. அதனால்தான் அவர் தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கிறார்.

அதனால், பண்டிதரின் சிந்தகைள் அவருக்கு தானே உதித்த சுய சிந்தனைகள் என்று சொல்லவில்லை. தனியறையில் அடைபட்டு வாழ்பவனுக்கு நான்கு சுவர்களைப் பற்றின சுயசிந்தனை மட்டும் தான் இருக்கும். அவனது சுயசிந்தனை உலகு தழுவியதாக என்றைக்கும் இருக்காது என்பது போலவே, மக்களிடம் பணிபுரிபவனின் உலகு தழுவியதாக மக்கள் பிரச்சினைகளால் தாக்கம் பெற்று உருவான சுயசிந்தனைகளாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் சுயம்புகளாக முன்னிறுத்திக் கொள்வதில் அப்படியொரு ஆனந்தம் சாதி ஆனந்தம்

பிரெஞ்சு தத்துவஞானி டேன்

'நாகரீகத்தின் பரிணாமத்தில் ஒரு புதிய அடிவைப்பு ஒரு புதிய கலைவடிவத்தை தோற்றுவிக்கும்போது சமுதாய சிந்தனையை அரைகுறையாக வெளியிடுகின்ற பலப்பல ஆற்றல்கள் அதைமுழுமையாக வெளியிடுகின்ற ஓரிரு மகா மேதைகளைச் சூழ்ந்து தோன்றுகின்றன.'

என்று சரியாகவே சொன்னார். இப்படி உருவானவர் தான் பண்டிதரும் அவரது இடஒதுக்கீடு கொள்கைகளும் அதற்காக இந்த சாதி இந்து சமூகத்திற்கு நன்றி சொல்ல முடியாது. ஏனெனில் அது இன்னும் நாகரீக சமுதாயத்திற்குள் நுழையவில்லை, அப்படி நாகரிக சமூகத்திற்கு நூல் தலைகாட்ட வேண்டுமானால் அவர்களது விடுதலைக்கு தலித் முன்னோடிகள் உழைத்திருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்திக் கொள்ளவேண்டும் அந்த பணிக்கு இந்நூல் பயன்படுமென நம்புகிறேன்

அதின்றி. இந்நூலை மறுக்க எத்தனிப்பவர்களுக்கு டேன் அவர்களின் வாசகங்களையும், இந்நூலின் ஆதாரங்களையும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

இனி இந்நூல் எழுத காரணமானவர்களுக்கு நன்றி சொல்ல விழைகிறேன் முதலில் இந்த சமூக சூழல் இடஒதுக்கீடு குறித்து அண்மைகாலமாக பரப்பப்பட்டு வரும் மோசடியான சாதி இந்து பிரச்சாரங்கள், பொய்கள், இந்த நெருக்கடிகள்தான் முதற்காரணம்.

கௌதம சன்னா / 7