பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ல் புலவர் கா. கோவிந்தன் குளிரும், வெயிலின் வெப்பமும் தன்னை அணுகாதவாறு, வாய்ப்புப் பல கொண்ட மாடி வீடு கட்டி மகிழ்ந்து வாழ்கிறது இன்று. இவ்வுயர் நிலைபெற அம்மக்களினம் மேற்கொண்ட போராட்டம் ஒன்றா? இரண்டா? ஆயிரம், ஆயிரம்! மானின் தோலும், மரத்தின் இலையும் கொண்டு தன் மேனியை மறைத்து மானத்தைக் காத்துக் கொண்ட மக்களினம், பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் శిణా கொட்டைக் கரைய பட்டுடைகளையும், கால் உறை, மெய்யுறை முதலாம் சட்டைகளையும் அணியக் கற்றுக் கொண்டுளது இன்று. எத்தனை எத்தனை போராட்டங் களுக்குப் பின்னர்க் கிடைத்த பலன் இது? பண்டு காடும், மலையும், காட்டாறுமாக இருந்த இந்நிலம், இன்று நாடாகவும், நகரங்களாகவும், நெல் விளை நன்செய் புன்செய்களாகவும், சிறியவும் பெரியவுமாய தொழில் நிலையங்களாகவும் காட்சி அளிக்கிறது. இக் காட்சியை அளிக்க மக்கள் இனம் மேற்கொண்ட போராட்டத்தின் எண்ணிக்கையினைக் கணக்கிட்டுக் காணல் கூடுங்கொல் ? ஊரை விட்டு ஒரு காத தூரம் செல்ல, ஒரு மாத காலத்தை வீணாக்கிய மனிதன், இன்று ஒரு சில நாட்களுக்குள் உலகத்தையே வலம் வந்து விடுகிறான்; வானிலே பறக்கிறான்; வான் வெளியையும் கடக்கிறான்; கடலிலே மிதக்கிறான்; நிலத்தில் காற்றினும் கடுகிச் செல்கிறான்; இவ்விரைவும் வசதியும் போராடாமலா கிடைத்தன? - - - ஆழ்கடலடியில் அடங்கியிருந்த முத்து, பவளம்; கண்ணொளிபுகாக் காடுகள் செறிந்த மலைப் பிளவுகளில்