பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ 99 பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் ஆன மெல்லிய ஆடைகளைப் பல்வேறு வடிவங்களில் உடுக்கத் தலைப்பட்டு விட்டனர். அகங்களிக்கும் ஆடை அடையப் பெற்றதும், அம்மக்கள் உள்ளம் அணிகள்பால் அவாக் கொண்டது. காட்டில் வாழ்ந்திருந்த காலை, நரிப்பல்லும், புலிப்பல்லும், மயிர்ப்பினையும், அன்னத்தின் வெண்ணிறத் தூவியும் போதும் தம்மை அணி செய்து கொள்ள என்று எண்ணி அமைதி கண்ட அம்மக்கள் மனம், இன்று மாற்றுக் குறையாப் பசும் பொன்னிடையே நவமணிகள் இழைத்துப் பண்ணப் பெற்றுத் தலைக்குச் சுட்டி, காதிற்குக் குழை, கழுத்திற்கு ஆரம், இடைக்கு மேகலை, கைக்கு வளை, காலுக்குச் சிலம்பு எனப் பல்வேறு உருவமும் பெயரும் கொண்ட எண்ணிலாப் பொன்னணிகள் பால் அவாக் கொண்டு அலைகிறது. இவ்வாறு உணவும், உடையும் ஆடையும் அணியும் வகை வகையாக அமைத்தல் வேண்டும் என்ற அவா பெருகவே, அவை தேடிக் கொணர்வான் வேண்டி, வாழிடம் விட்டு வேறிடம் சென்று வரவேண்டிய இன்றியமையாமை வந்துற்றது. அதனால், காட்டையும், மலையையும் கால்களால் நடந்தே கடந்தான்; ஆற்றையும், கடலையும் நீந்தியே கடந்தான். ஆனால், அவ்வாறு கடந்த நிலையைக் கடந்து, மனிதன் இன்று, எங்கோ சென்று விட்டான். கட்டை வண்டிகளையும் கட்டு மரங்களையும் கருதுவதில்லை; மாடு, குதிரை பூட்டிய வண்டிகளையும் பாய் விரித்த பாய் மரக் கப்பலையும் மனத்திற் கொண்டிலன். நீராவி இயக்க, நில எல்லையை நினைத்த அளவில் கடக்கும் நீண்ட வண்டித் தொடர்களையும், நீரைப் பிளந்து செல்லும் நாவாய் களையும் நினைத்துப் பார்ப்பதில்லை. தன் தேவைகளை