பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ல் புலவர் கா. கோவிந்தன் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் தன் உள்ள விரைவிற்கு அவை துணைபுரியா என எண்ணி, அவற்றைக் கைவிட்டு நிலத்தையும் நீரையும் ஒருங்கே கடக்க வல்லதும், இந்நிலவுலகையே விட்டு வேறு உலகிற்குக் கொண்டு செல்ல வல்லதுமாகிய வான்வெளிக் கப்பல்களை விரைந்து கட்டத் தொடங்கி விட்டான். இவ்வாறு நாகரிகம் வளர வளர, நாட்டு மக்கள் அறிவு பெருகப் பெருக, உண்னும் உணவு, இருக்கும் உறையுள், உடுக்கும் உடை, அணியும் அணி, ஊர் செல்ல உதவும் ஊர்தி ஆகிய இவை, பண்டிருந்த பழிநிலையின் நீங்கிப் பாராட்டத்தக்க புதிய நிலையினவாதல் வேண்டும் என்ற வேட்கை, மக்கள் உள்ளத்தில் வேர் ஊன்றிக் கொண்டது. இவ்வாறு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர, அம்மக்கள் கொள்ளும் ஆசைகளும் பல்வேறு வகையின ஆதல் உலகியற்கை ஆகும். ஆசைகள் பல்வேறு வகையின ஆகும் எனினும், அவற்றைப் பொதுவாகப் பொன் ஆசை, மண் ஆசை என்ற இரு பெரும் பிரிவினுள் அடக்கி விடலாம். பசித்த பாலை நிலத்து மறவர், முல்லை நிலத்து ஆயர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வர, அது காரணமாக நிகழ்ந்த வெட்சிப் போர், பொன் ஆசையை அடிப்படை யாகக் கொண்டு எழும் போரில் முதற் ப்டியாகும்; செல்வமாவது ஆனிரைகள் மட்டுமே என மதிக்கப்பட்ட காலத்தில், அப்போர் ஒன்றே பொன்னாசை காரணமான போராக இருந்தது; அந்நிலை மாறிச் செந்நெல்லும், பொன் அணிகளுமே நிறை செல்வங்களாம் என்ற நிலை பிறந்த காலத்தில், அவையற்ற நாடுடையான், அவை பெற்ற நாட்டுள் புகுந்து கொள்ளையிடல் காரணமாக எழுந்த போர், பொன் ஆசை காரணமான போரின் முடிந்த