பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 10 நிலையாகும். பிற நாட்டுப் பொன் வளம் குறித்துப் போருக்கு எழுவான் செயல், ஆற்றலைக் கள்வரின் செயலி லிருந்து சிறிதளவே வேறுபட்டதாகும். ஆறலைக் கள்வன் ஓரிடத்தில் இருந்தவாறே, அவ்வழியில் வருவோரை வருத்தி அவர் கொணரும் பொருள்களைக் கொள்ளையிடுவன்; பொன் ஆசை கொண்டு போருக்கு எழுவோன், அப் பொருள் இருக்கும் இடம் தேடிச் சென்று கொள்ளையாடி வருவன்; இச்சிறு வேறுபாடு தவிர்த்துப் பொன்வளம் உடையாரின் மண்ணின் மீது காதல் கொள்ளாது, அம்மண்ணில் மண்டிக் கிடக்கும் பொன்னின் மீது மட்டுமே காதல் உடையராதலில் இருவருமே ஒருமைப் பாடு உடையவராவர். - 'பெரும் பொருளால் பெட்டகத்து ஆகி, அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு” என்றார் வள்ளுவர். தன்னைச் சூழ்ந்திருக்கும் நாடுகளில் காணமாட்டாப் பல்வேறு வளங்களையும் பெற்றிருப்பதே நாட்டிற்குப் பெருமையாகும். ஆனால், அந்நாடு பெற்றிருக்கும் அப்பெருமையால் அந்நாட்டிற்குக் கேடு வருதலும் இயல்பாகி விடும்; அந்நாடு பெற்றிருக்கும் பெருவளத்தைத் தங்கள் நாடுகள் பெறவில்லையே என்ற பொறாமைத் தீயால் வேகும் பிறநாட்டு வேந்தர்கள் அந்நாட்டின் மீது படை தொடுத்து அந்நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை யிட்டுப் போவதிலேயே குறியாய் இருப்பர். தமிழகம் பண்டு அத்தகைய தன்னேரில்லாப் பெருவளம் பொருந்திய நாடாய் விளங்கியதனால்தான் தமிழகத்தின் மீது ஆரியர் படையெடுத்து வந்தனர்; கோசர் படையெடுத்து வந்தனர். வடுகர் வந்தனர்; வம்ப மோரியர் வந்தனர்; களப்பிரர் வந்தனர். அவ்வாறு படையெடுத்து வந்த அவர்கள்