பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இ. புலவர் கா. கோவிந்தன் சென்று அந்நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு வருவதைக் காட்டிலும், அவ்வளமிக்க நாட்டையே தன்னாடாக ஆக்கிக் கொண்டால் தொல்லை கள் திரும் என எண்ணலாயினான். அவ்வெண்ணத்தில் முகிழ்த்த மண்ணாசை காரணமான போர், பொன்னான்ச காரணமாக உருவங் கொண்ட போர், மண்ணாசை காரணமான போராக உருமாறிவிட்டது. மன்னர்கள், தங்கள் நாட்டு எல்லைகளை விரிவாக்க எண்ணுவது தவறுடையதாகாது. அஃது அவர்கள் கடமையும் ஆகும். தன் நாட்டு மக்கள் தொகை பெருகி அவர்க்கு வாழிடக் குறைபாடு உண்டாதல் காணும் நாடாளும் மன்னவன் தன் நாட்டைச் சூழ இருக்கும் காடுகளை அழித்து நாடாக்கும் நல்ல முயற்சியினை மேற்கொள்வன்; அவ்வாறு, பண்டு பாராண்டிருந்த பேரரசர்களின் முயற்சியின் பயனே, இன்று பரந்து காணும் நம் பைந்தமிழ் நாடு; அவ்வாறு நாடு காணும் முயற்சியின் நலன் கண்ட மகிழ்ச்சியாலும், அம்முயற்சி இடையே மங்கி விடாது மேலும் மேலும் உரம் பெற்றுச் செயல் படற்காம் ஊக்கம் அம்மன்னர்க்கு உண்டாதல் வேண்டும் என்ற உள்ளுணர்வாலும், அது செய்யும் மன்னர்களைப் புகழ்ந்து பாடும் தம் பாக்கள் இடையே காடழித்து நாடு காணும் அவர் செயலைப் பெருமையாகக் கூறிச் சென்றார்கள் பண்டைத் தமிழ்ப் புலவர்கள். பட்டினப்பாலை பாடிக் கரிகாற் பெருவளத்தானைப் பாராட்டும் கடியலூர் உருத்திரங் கண்ணனார், அப்பெரும் பாட்டிடையே, "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி" என்ற தொடரையும் வைத்துப் பாராட்டியுள்ளமை காண்க.