பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. இ. புலவர் கா. கோவிந்தன் "வஞ்சிதானே முல்லையது புறனே; எஞ்சா மண்நசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்று வஞ்சித் திணையின் விளக்கம் கூறும் இச்சூத்திரத்தில் "வேந்தன்”, “வேந்தனை", "அடல் குறித்தன்று” என்ற மூன்று சொற்களும் முறையே எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளாக, "தலைச்சென்று” என்பது அடல் குறிக்கும் வேந்தன், அவ்வடல் புரிவதன் முன் நிகழ்த்தும் அவன் வினையுணர்த்தும் வினையெச்சமாக, “அஞ்சுதக" என்பது செல்லும் அச்செயலின் இயல்பு உணர்த்தித் "தலைச் சென்று” அவ்வினையெச்சத்திற்குச் சிறப்பளிக்கும் வினை யடையாக, "நசை” என்பது நசையை உடைய எனப் பொருள்பட்டு, அஃதுடைய வேந்தனைச் சிறப்பிக்கும் பெயரடையாக, "மண்” என்பது, நசை பலவாதலின், அவற்றுள் இந்நசை மண் பற்றியது என அந்நசையின் இயல்பு உணர்த்தும் பெயரடையாக, "எஞ்சா” என்பது, அளவிறந்த எனப் பொருள்பட்டு அந்நசையின் அளவு உணர்த்தும் பெயரடையாக, "மண் நசை", "எஞ்சாநசை", "எஞ்சா மண்நசை” எனக் கொண்டு கூட்டப்படுவதாக, அளவிறந்த மண் ஆசை உடைய வேந்தனை என, மண் ஆசையை அவ்வேந்தன் ஒருவனுக்கு மட்டுமே ஏற்றி, அவ்வேந்தனை அவ்வேந்தனால் நச்சப்படும் மண்ணுக்கு உரிய வேந்தன் அடல் குறித்தன்று என, அவனுடைய ஆசை அழிய அவனை அட்டான் என, அளவிற்கு மீறிய ஆசையின்மையோடு, அவ்வாசையுடையானை அடக்கும் பெருமையும் என்ற இரண்டையும் மண்ணுக்கு உரிய மன்னனுக்கு ஏற்றித் தனக்குரிய மண் மீது ஆசைகொண்டு வருவானை வென்று துரத்தித் தன் மண் காப்பதே