பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி ன் 9 மண்டிக் கிடந்த மாணிக்கம்: மண்ணுக்கடியில், மண் னோடு மண்ணாகக் கலந்து கிடந்த பொன்; இவற்றைக் கொண்ட அழகிய அணி ஆக்கித் தர அம்மனித இனம் ஆற்றிய போராட்டப் பெருமையை அளவிட முடியுமா? நீரோடும், நெருப்போடும், காற்றோடும், மற்ற இயற்கைப் பொருள்களோடும், காட்டில் வாழும் கொடு விலங்குகளோடும் நடத்திய இப்போராட்டங்களில், மக்களினம் ஓரளவு வெற்றி பெற்று விட்டது. மக்களினம் இயற்கைகளோடு நடத்திய இவை போலும் போராட்டங்களை விரும்பாத நாடு, உலகில் எங்கும் எப்போதும் இருந்தது இல்லை. இனியும் இராது; மாறாக, அத்தகைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதிலேயே தம் வாழ்வின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, அப்போராட்ட வெற்றிக்காக ஒவ்வொரு நாடும் ஓயாது அரும்பாடு படுகிறது. . ஈண்டு நாம் ஆராயப் புகுவது, மக்களினம், இயற்கை யோடு நடத்திய, தடத்திக் கொண்டிருக்கும் அவ்வாக்கப் போரை அன்று; மக்கள் என்ற ஒருயிரினத்திற்குள்ளாகவே, ஒரு பிரிவினர், பிறிதொரு பிரிவினரோடு நடத்திய டோரே, ாண்டைய நம் ஆராய்ச்சிப் பொருள் ஆகும். மக்களினம், பிற உயிரினங்களோடும், இயற்கை களோடும் போராடுவது இயல்பு; எல்லோராலும் விரும்பப்படுவது: ஆக்கத்திற்கு வழிகோலுவது. ஆனால், மக்களினம், மக்களினத்தோடேயே போராடுவது, இயற்கையொடு மாறுபட்டது; விரும்பத்தகாத்து அழிவிற்கு வழி கோலுவது. என்றாலும், அப்போர் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.