பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 11 அவன் அது குறித்துப் படையெடா முன்பே அவன் மீது படையெடுத்துப் போய் அழித்துத் தன் அரண் அழிவைக் காப்பதே உழிஞை, தன் ஆற்றல் காட்ட அமர் மேற்கொண்டுவரும் ஆசை ஒருவனுக்கு உளது என அறிந்து அவன் தன்மீது வாராமுன்பே அவனைத் தாக்கி அழிப்பதே தும்பை என்றும் கூறியிருத்தல் வேண்டும். ஆனால், ஆண்டெல்லாம் அவ்வாறு கொள்ளாது, "தனது நாட்டில் உள்ள பசுக்களைப் பகைவேந்தன் படை மறவர் களவில் கவர்ந்து சென்றதை அறிந்த மன்னன், தன் படைவீரர்களை யனுப்பி அப்பசுக்களை மீட்டு வருவதற்குரிய செயல் முறைகள் வெட்சித் திணையின் இடையே நிகழ்வன வாதலின், அவற்றை வேறு திணை ஆக்காமல் வெட்சித் திணைக்குரிய துறைகளாகவே கொண்டார் தொல் காப்பியனார்' என்றும், படையெடுத்து வந்த வேந்தன், பகைவனது அரணைச் சுற்றி வளைத்துக் கொள்ளுதலும், உள்ளே யிருந்த வேந்தன் அவ்வரணை நெகிழ விடாது பாதுகாத்தலுமாகிய அவ்வியல்பினை உடையது உழிஞைத் திணையாம்" என்றும், தனது வலியினை உலகம் உயர்த்துப் புகழ்தலைப் பொருளாகக் கருதிப் போர்மேற் கொண்டு வந்த வேந்தனை மாற்று வேந்தன் எதிர்த்துச் சென்று அவனது தலைமையினைச் சிதைக்கும் நிலையில் அவ்விரு பெருவேந்தரும் ஒரு களத்துப் போர் செய்தல் தும்பைத் திணை எனப்படும்" என்றும் கூறி, ஆக்கப்போர் புரிவதன் முன்னர், அழிவுப் போர் நிகழ்ச்சி யுண்மையினை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவ்வாறு ஆண்டெல்லாம் அம் முறையினை ஏற்றுக் கொண்டு, ஈண்டு மட்டும் இவ்வாறு கூறுவது ஒன்றே, அவர் கூற்று ஆசிரியர் கருத்தொடு பட்டதன்று என்பதற்குச் சான்றாகும். இவ்வாறு தாம்