பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இ. புலவர் கா. கோவிந்தன் கொண்டதே பிழைபடு பொருளாகவும், "முல்லைப்புறம் மண்ணாசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான். அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின், வஞ்சி என ஒரு குறிபெறும், என இளம்பூரணர் கூறும் கொள்கை தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்ற வில்லை," என உரையாசிரியர் உரையில் பிழைகாணப் புகுந்து விடுகின்றனர். பாலைநிலம் ஒன்றும் விளையா வன்னிலமாதலின், அந்நிலத்து மக்களாம் மறவர் பசியால் வருந்தினர்; அதனால் அவர்கள் பசி தீர்க்கும் உணவினைத் தேடி அலைந்தனர்; அலையுங்கால், முல்லை நிலத்து ஆநிரைகளைக் கண்டனர். கவர்ந்து சென்றனர்; அஃது அறிந்த அம்முல்லை நிலத்து ஆயர், அந்நிரையினை மீட்க அம்மறவரோடு போரிட்டனர்; வெட்சிப் போர் உருப்பெற்றது; அவ்வகையால், பற்றாமையே வெட்சிப் போர்க்குக் காரணம் ஆனதைப் போலவே, வஞ்சிப் போர்க்கும் அப்பற்றாமையே காரணமாம். நாட்டின் இயல்பு கூற வந்த வள்ளுவர், "தள்ளா விளையுளும் தக்காரும், தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” என, எடுத்த எடுப்பிலேயே குறைவு அறியா நிறை விளை வினையே கூறியுள்ளார். அம்மட்டோ பிற நாட்டு மக்கள் எல்லாம் கண்டு வியக்கத்தக்க பெருவளம் உடையதாதல் வேண்டும். வளக்கேட்டினை அறியாததாதல் வேண்டும். உள்ள வளத்தோடு, மேலும் பல வளங்கள் பெருகிக் கொண்டே யிருத்தல் வேண்டும். பெரும் பொருளால் பெட்டகத்து ஆகி, அருங்கேட்டால், ஆற்ற விளைவது நாடு” என வற்றா வளமுடைமையினையே மேலும் மேலும்