பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 113 வற்புறுத்திச் சென்றுள்ளார். ஒரு நாட்டில் இருக்க வேண்டுவனவற்றுள் தலையாயது தள்ளா விளையுள் ஆகும் எனக் கூறியதற்கு ஏற்ப, ஒரு நாட்டில் இருக்கக் கூடாதன. வற்றுள் தலையாயது பசித்துன்பம் என்று கூறியுள்ளார்; பசி வந்திடின் பகை வந்திடும். பகைக்குக் காரணம் பசியே; ஆதலின், நாடு பகைப்பயம் அற்று வாழ வேண்டுமாயின் பசிநோய் அற்று வாழ வேண்டும்; ஆகவே, முதற்கண் அகற்றப்பட வேண்டுவது பசிப் பேயே; ஆகவேதான், 'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு” என நாட்டிற்கு நலிவு தரும் நோய்களுள் பசி நோயை முதற்கண் கூறியுள்ளார் வள்ளுவர். "பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி” என வாழ்த்துக் கூறும் போதும், பசி நீங்கி வாழும் வாழ்வினையே முதற்கண் வைத்து வாழ்த்தியுள்ளார்கள் சிலம்பாசிரியர் அடிகளாரும், மேகலை ஆசிரியர் சாத்தனாரும். ஆகவே, பகை வளரக் காரணமாவது பசியே; பற்றாமையால் வந்துற்ற பசித் துன்பத்தைப் போக்கவே, பண்டு பாலைநிலத்து மறவர், முல்லை நிலத்து ஆயர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். அதைப் போலவே தன் நாட்டில் மக்கள் செல்வம் பெருகியதற்கு ஏற்பப் பொருட்செல்வம் பெருகாமையினால் நேர்ந்த குறை பாட்டினைப் போக்கவே, வளம் அற்ற நாடுடையான், வளம் மிகுந்த தன் அண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளப் படை யெடுத்தான்; வஞ்சிப் போரின் அடிப்படைக் காரணம் இதுவே யாதல் வேண்டும். தன் நாட்டைக் காட்டிலும் தன் அண்டை நாடுவளம் மிகுந்துள்ளது; தன் நாட்டைக் காட்டிலும் தன் அண்டை நாடு இடம் அகன்றுளது என்ற காழ்ப்புணர்வு காரணமாக ப.த.போ.நெ-8