பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இல் புலவர் கா. கோவிந்தன் அவ்வண்டை நாட்டின் மீது படையெடுத்துப் போனதை, உலக வரலாற்றில் காண்கின்றோமே யல்லது, வளம் மிக்க நாட்டவர், வளம் இழந்த நாட்டின் மீது படையெடுத்துப் போனதை எக்காலத்தும் கண்டிலோம். ஆகவே, தன் நாடு வளம் குறைந்துளது என்ற காரணத்தால், தன் அண்டை நாட்டின் வளத்தினைத் தனதாக்கிக் கொள்ள விரும்பிய ஒருவன், அங்ங்னம் வேண்டும்போதெல்லாம், அந்நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி கொள்வதைக் காட்டிலும், அந்நாட்டையே தனதாக்கிக் கொள்வதே நன்று எனும் நினைவால், அந்நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல, அந்நாட்டு மன்னன், அவனை வென்று ஒட்டித் தன் நாட்டைக் காத்துக் கொள்ளும் நிகழ்ச்சியே வஞ்சி ஒழுக்கமாகும். இவ்வாறு வஞ்சி ஒழுக்கமாவது யாது என்பதை விளக்கிய பின்னர், அவ்வொழுக்கத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைப் பின்வரும் சூத்திரத்தில் வரிசையாக கூறியுள்ளார்: - - "இயங்கு படை அரவம், எளிபரந்து எடுத்தல், வயங்கல் எய்திய பெருமை யானும், கொடுத்தல் எய்திய கொடைமை யானும், அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத் தானும், மாராயம் பெற்ற நெடு மொழியானும், பொருள் இன்று உய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை யானும், பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலையும், வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும் குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும், அழிபடை நட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெரும் சிறப்பின் துறை பதின்மூன்றே.”