பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஆ. புலவர் கா. கோவிந்தன் "உண்டி முதற்றே உணவின் பிண்டம் என்றார் ஒரு பெரியார்; இவ்வுடலுக்குச் "சோற்றால் அடித்த சுவர்” என்ற பெயரிட்டு வழங்கினார் பிற்காலப் பெரியார் ஒருவர்; "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்ற உண்மையை உணர்ந்து உணர்த்தியுள்ளார் சங்க காலப் பெரியார் ஒருவர்; அத்தகைய நிலம், எங்கும் ஒரே இயல்பு உடையதாக அமைந்து விடவில்லை. பல்வளம் கொழிக்கும் மலை நிலம் எனும் மாண்புடையதாகத் திகழ்கிறது ஒருபால்; காட்டு வளம் மிக்க கவினுடையதாகக் காட்சி அளிக்கிறது மற்றொருபால். நெல்லும் கரும்பும் விளையும் நன்செய் களாக நலம் பெற்று விளங்குகிறது, பிறிதொருபால், உப்பும், மீனும், உயர்ந்த முத்தும் தரும் கடலாகக் காட்சி அளிக்கிறது வேறு ஒரு பால், இவற்றினுாடே, இட்ட விதைகள் வெந்து வீணாகும், ஒன்றிற்கும் உதவா உவர் நிலங்களும், மணலே பரந்த பாலை நிலங்களும் இடம் பெற்றுள்ளன. நில வகையில் காணலாம் இவ்வேற்றத் தாழ்வுகள் நிலவள வோடு நின்றுவிட வில்லை. "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்பது உண்மை யொடுபட்ட உரையே ஆயினும், உழைப்பின் உறுபயன் அறியாத உலகத் தொடக்க நிலையில், நிலங்களின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்பவே, மக்கள் நிலையிலும் ஏற்றத்தாழ்வுகள் இடம் பெற்றன. மக்கள் வாழ்வு, அவர்கள் சார்ந்து நின்ற மண்ணின் வளம் வளமின்மைகளுக்கு ஏற்ப, வளமுடையதாகவும், வளம் அற்றதாகவும் மாறுபட்ட்ே அமைந்தது. நன்செய் போலும் வயல் வளம் மிகுந்த நாடுகளில் வாழப்பெற்ற மக்கள், வற்றாப் பேரின்ப வாழ்வுடையராயினர்; களர் நிலமும், கல்நிலமும் போலும்