பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 19 நாற்படையை வெற்றி கொண்ட பின்னரே, அந்நாட்டை அடைதல் இயலும் என எண்ணி விடுவது கூடாது; போர் நுணுக்கம் அறிந்த பெரும் படைத் தலைவர்கள், போர்க் களம் புகுந்து, போரிடாமல் பெறலாகும் வெற்றிகளையே விரும்புவர். அவ்வாறு பெறும்வெற்றியே, தம்மையொத்த பெரும் படைத் தலைவர்கள் பெறற்குரியதாகும்; அவ்வா றின்றிப் போர்க்களம் புகுந்து, போராடிப் பகைவர் படை களையும் அழித்துத் தம் படையின் ஒரு பகுதியையும் பலி கொடுத்துப் பெறும் வெற்றியை வெற்றியாக மதியார். பாம்பு உறையும் புற்றைக் கண்டே அஞ்சுதல் போலவும், கொல்லேறு உலாவுதல் அறிந்தே ஊர் மன்றை அடைய அஞ்சுதல் போலவும், தன் வருகை கண்டே பகைநாடு பணிந்து விடுதல் வேண்டும் என்றே பெரும் படைத் தலைவர்கள் விரும்புவார்கள். அவ்வாறு போர்க்களம் புகாமலே வெற்றி காண விரும்பும் படைத் தலைவர்கள், அதற்காக மேற்கொள்ளும் செயல் முறைகள் சில உள. நாட்டு மக்கள், நாடாளும் காவலனுக்குத் துணையாக நிற்கும் வரை அந்நாட்டைக் கைப்பற்றுவது எவ்வளவு பெரிய படைக்கும் இயலாது; ஆகவே தங்கள் நாட்டைக் காக்கும் ஆற்றல் தங்கள் நாட்டுக் காவலனுக்கு இல்லை; ஆகவே, தங்களையும், தங்கள் உடைமைகளையும் காத்துக் கொள்ள, அவனை எதிர்நோக்கி நிற்பதில் பயன் இல்லை. ஆகவே, பாய்ந்து வரும் பகைவர் படைக்குப் பணிந்து போலது நன்று என்ற நினைப்பு, அந்நாட்டவர் உள்ளத்தில் உண்டாதற்காம் வழி வகைகளைப் படை கொண்டு வருவார் மேற்கோடல் வேண்டும். அது, அந்நாட்டவர் உடைமைகளாம் விளை வயல்களுக்கும் வாழிடங்களுக்கும் தீ மூட்டுவதாலும், உண்ணு நீர் நிலைகளில் தன் போர்க்