பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இ. புலவர் கா. கோவிந்தன் களிறுகளைப் போக்கிச் செருக்கிப் பாழாக்குவதாலும், அந்நாட்டுக் காவலனின் காவல் மரத்தைத் தன் களிறுகளைக் கொண்டு வேரோடு பறித்துச் சாய்ப்பதாலும், நீர் நிலைகளின் கரைகளை அழித்து, வெள்ளப் பெருக் கோடச் செய்வதாலும் அந்நாட்டு மக்கள் உள்ளத்தில் அச்சம் எழப் பண்ணுவர். அவ்வகையால், வீடு இழந்தும், வாழ்விழந்தும், உண்பொருள் இழந்தும், உண்ணு நீர் இழந்தும் அழத் தொடங்கிய மக்கள், தம் வாட்டத்தை நாடாளும் வேந்தனால் மாற்ற இயலாது என அறிந்து, வந்த படையாளர் வேண்டுவ கொடுத்து அவர் வழி நின்று விடுவர்; நாட்டு மக்கள் செயல் அதுவாகிய பின்னர், நாடாள்வோன் மட்டும் பணியாதிருப்பது இயலாது; அவன் தானே வந்து பகைவன் தாள் பணிந்து போவான்; தங்கள் காவலனாம் கழுவுள் என்பான், தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையால் தமக்கும், தம் உடைமை களாம் தம் ஆனிரைகளுக்கும் நேர்ந்த கேட்டினைப் போக்க மாட்டாமை கண்ட ஆயர் குலத்தவர், அவ்விரும் பொறையின் படைத் தலைவரைத் தாமே அணுகி, அவர் விரும்பும் ஏறுகளோடும், கன்றுகளோடும் கூடிய கறவைகள் சிலவற்றைத் தந்துவிட்டுத் தம் ஆனிரைகளை மீட்டும் பெற்றுக் கொண்டன்ராக, அஃதறிந்த கழுவுள், மறுநாள், பொழுதுபுலரா முன்பே, ஊரில் தயிர் கடையும் மத்தொலி எழா முன்பே, தலை மறைவாக வந்து, பெருஞ்சேர லாதனைப் பணிந்தான் என்ற பதிற்றுப்பத்துச் செய்தியால், எரி பரந்து எடுத்தல் என்ற துறைக்கு விளக்கம் உண்டாதல் அறிக. “ஏறொடு, கன்றுடைஆயம் தரிப் புகல் சிறந்து புலவுவில் இளையர் அங்கை விடுப்பு,