பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 121 மத்துக் கயிறு ஆடா வைகற்பொழுது நினையூஉ ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க.." -பதிற்றுப்பத்து: 71. இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் ஆசிரியர் தொல் காப்பியனார், "எரி பரந்து எடுத்தல்” என ஒரு தலைப்பில் கொண்டாராக, பு.வெ. மாலை ஆசிரியர், "உழபுல வஞ்சி", "மழபுல வஞ்சி”, “பெரு வஞ்சி” எனப் பல தலைப்புகளில் கொண்டுள்ளார். இவ்வாறு பகை நாட்டு மக்கள் உள்ளத்தில் அச்சமும் மருட்சியும் உண்டாக்கி வெற்றி காணச் செய்யும் இக்கொடுஞ் செயல்களை, ஒரு நாட்டின் மீது ஆசை கொண்டு படையெடுத்து வருவான் செய்வனே அல்லது, அந்நாட்டிற்கு உரியவனே செய்யான் ஆதலின், இவ் "வெரி பரந்து எடுத்தல்" என்ற துறையும் மண்ணாசை கொண்டு வரும் மன்னன் செயல் குறிப்பதே ஆகும். தன் நாட்டில் வந்து தங்கியிருக்கும் பகை நாட்டுப் படை களுக்குப் பயன்படாது ஒழிக. எனத் தன் நாட்டு வளங்களைத் தானே அழித்து விடுவதை அந்நாட்டு அரசன் ஒரோர் வழிச் செய்வதும் உண்டாம் எனினும், இந்நிகழ்ச்சி அந்நிகழ்ச்சியைக் குறியாது. மேலும் புறநானூறு போலும் புறப்பொருள் கூறும் நூல்கள் எல்லாம் படையெடுத்துப் போவான் பகை நாட்டில் செய்யும் பாழ்களுக்குச் சான்று பகர்கின்றனவே அல்லது, தன் நாட்டு வளத்தை அந்நாட்டு அரசனே அழித்தமைக்கான சான்று ஒன்றையும் அளித்தில. "எரி பரந்து எடுத்தல்” என்றதுறைக்கு எடுத்துக் காட்டாகும். "வினைமாட்சிய விரைபுரவியொடு’ (புறம்:15) என்ற புறநானூற்றுச் செய்யுட்கண் காணப்படும் முனை முருங்கத் தலைச் சென்று, அவர், விளைவயல் கவர்பூட்டி, மனைமரம் விறகாகக் கடிதுறை நீர்க்களிறு படிஇ, எல்லுப் படவிட்ட