பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 123 விளக்கமுற்ற பெருமை” என, ஒருவாறு ஒத்த பொருளே கூறியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டும், “மேற்செல்லுங்காலைத் துணைவந்த வேந்தர்தம் பாற்செல்லச் செல்லும் பசியினால்-நாற்கடல்சூழ் மண்மகிழும் காட்சியான், மீன்பூத்த வானத்து வெண்மதிபோல் மேம்பட்டான் வேந்து" என்ற வெண்பாப் பொருளும், அவன் படைப் பெருமை யினையே பாராட்டுவதும் நோக்கின், "வயங்கல் எய்திய பெருமை'யாவது, நாற்படை பகைவர் அஞ்சுமளவு பெருத்துவிட்ட பெருமையினைக் கூறுவதாகும் என்றே கொள்ள வேண்டியுளது. இதுவே அதன் பொருள். ஆகவே, போர் தொடுப்பதன் முன்னர்த் தன் நாற்படையைப் பெருமளவில் பெருக்குவதும், எளிதில் வெற்றி பெறுவதற்கு வேண்டும் பயிற்சிகளை அளிப்பதும், நட்புடைய பிற அரசர்களின் துணையினை வேண்டிப் பெறுவதும் ஆகிய செயல் முறைகளை மேற்கொள்வது, ஒரு நாட்டின் மீது ஆசை கொண்டு, அதைக் கைப்பற்றுதற்கேற்ற படை பலமும், காலமும், இடமும் வாய்க்குமளவும் காத்திருக்கும் அரசனுக்குப் பொருந்துமே யல்லது, பகைவன் தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான் என்ற செய்தி கேட்ட அளவே, எல்லைக்கு விரையும் வேந்த னுக்குப் பொருந்தாது. ஆகவே, வயங்கல் எய்திய பெருமை என்ற இத்துறையும் மண்ணாசை கொண்ட மன்னன் செயலே அல்லது, மண்ணுக்கு உரியான் செயலாகாது என அறிக. தான் கைப்பற்றிக் கொள்ளக் கருதிய பகை நாட்டின் அணித்தாகப் பாசறை அமைத்துக் கொண்டு, அப்பகை நாட்டின் மீது போர் தொடுப்பதற்காம் காலத்தை எதிர்