பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஜ் புலவர் கா. கோவிந்தன் நோக்கிக் காத்திருப்பதும் உண்டு. தன் நாட்டிற்கும் பகை நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லையாகிய முல்லை நிலமாம் குறுங்காட்டில், காட்டாற்றங் கரையில், பிடவம் முதலாம் புதல்களை வெட்டியும் எரித்தும் அகற்றிவிட்டு, முள்வேலி மரங்களை மதில்களாகக் கொண்டு, கடல்போல் பரந்த பாசறை அமைக்கப்பட்டதை முல்லைப் பாட்டு கூறுவதும் காண்க. "கான்யாறு தமீஇய அகல்நெடும் புறவில் சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட இடுமுள் புரிசை ஏமுற வளைஇப் படுநீர்ப் புணரியின் பரந்த பாடி' -முல்லைப் பாட்டு 24-28 இவ்வாறு, காட்டகத்தே, பாசறைகட்டி, அரசன் படை யோடு தங்கியிருக்கும் நிகழ்ச்சியைக் கூறும் துறை ஒன்று பு.வெ. மாலையில் வந்துளது. "குறுவஞ்சி” என்ற துறைப் பெயரையே தன் பெயராகவும் கொண்டிருக்கும் அத்துறை நிகழ்ச்சியால் கூறப்பெறும் செய்தியும் ஓரளவு, மண்ணாசை கொள்வான் படைப்பெருமையுணர்த்துவதாகவே, அதை யும் "வயங்கல் எய்திய பெருமையாகவே” கொள்ளலாம். "அவிழ்மலர்க் கோதையர்ஆட, ஒருபால் இமிழ் முழவம் யாழோடு இயம்பக்-கமிழ்மணிய காய்கட யானை ஒருபால் களித்து அதிரும் ஆய் கழலான் கட்டுர் அகத்து." - பு.வெ. மாலை 53. கொடுத்தல் எய்திய கொடைமை. இத்துறைக்குக் “கொடுத்தலைப் பொருந்திய கொடைமையும்” எனப் பொதுவாகவே பொருள் கூறியுள்ளார் இளம்பூரணர். "மேற்செல்லும் வேந்தர், தத்தம் படையாளருக்குப் படைக் கலம் முதலியன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலும்