பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 125 ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத் தொழில்" எனப் பொருள் கூறியுள்ளார் நச்சினார்க்கினியர். மண்ணாசை கொண்டு மாற்றான் மீது போர்தொடுக்கத் துணியும் மன்னன், தன் வேட்கை குறைவறா நிறைவேற வேண்டுமாயின், தன் படை வீரர்க்கும் தன் முயற்சியில் வேட்கையுண்டாதல் வேண்டும்; அவர்கள் அப்போரில் உண்மையான வேட்கையோடு பங்கு கொண்டாலொழிய, வெற்றி வாய்ப்பது அரிதாகி விடும்; ஆகவே அவர்க்கு வேட்கையை உண்டாக்குதல் அரசனின் நீங்காக் கடமை யாகும். தன் படையாளரை இயல்பாகவே, வறுமையறியா வளமார் வாழ்வில் வாழ வைத்திருப்பன் என்றாலும், அப்போர் நிகழ்ச்சியின் முன்னர்த், தன் பால் அவர்க்குள்ள பற்றும் பாசமும், மேலும் பன்மடங்கு பெருகுவான் வேண்டி, அவர்க்கு, அந்நிலையில் மேலும் பல பரிசுகள் வழங்குதல் வேண்டும். படைத்தலைவனுக்குத் தன்னுடைய விலைமதிக்கவொண்ணாத மணிமாலையைக் கொடுத்து விட்டு, அவனுடைய ஒற்றை மணிவடத்தைத் தான் அணிந்து கொள்வதும், தனக்கென வடித்து வைத்திருக்கும் விலையரிய கட்தெளிவை அவனுக்கு அளிப்பதும் ஆகிய சிறப்புக்களைப் பழந்தமிழ் அரசர்கள் பண்டே மேற் கொண்டிருந்தனர். "தன்தலை மணிமருள் மாலைசூட்டி, அவன் தலை ஒரு காழ் மாலைதான் மலைந்தனனே' (புறம்: 29) என்பது காண்க. இவ்வாறு சிறப்புப் பல செய்வதோடு, அவ்வீரர்களுக்குப் புதிய புதிய படைக்கலங்களை வழங்குவதும் உண்டு. இவ்வகையால், களம் புகுந்து போராடி வெற்றி காணும் வீரர்களுக்கு அவர் விரும்புவன வழங்குவதால் ஓர் அரசனுக்குக் கிடைக்கும் பயனைக் காட்டினும் மிக்கதொரு பயன், பிறிதொரு வகையாலும்