பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 127 பகைவன் படை பாய்ந்து விட்டது என்றதுமே, வென்று துரத்த விரைய வேண்டியவன் செய்யக் கூடியன அல்ல. ஆகவே, இதுவும், மண்ணாசை உடையான் செயல்களைக் கூறும் துறையே ஆகும். பு:வெ. மாலையார், வேந்தனால் சிறப்புச் செய்யப் பெற்ற வீரன் பெருமை பாராட்டும் மாராய வஞ்சி பாடிப் புகழ் பரப்பும் பரிசிலர்க்குப் பொருள் வழங்குவது கூறும் "கொடை வஞ்சி” தொல்லுழிக் காலம் தொட்டே, வாட்போர் வல்ல குடியில் வந்த வீரனின் புகழ்பாடும் 'முதுமொழி வஞ்சி' முதலாயின, கொடுத்தல் எய்திய கொடைமைத்துறையின் விரிவுகளே ஆகும் எனக் கொள்க. அடுத்து ஊர்ந்த அட்ட கொற்றம். இதற்குப் "பகைவர் பலரையும் அடுத்து மேலிட்டுக் கொன்ற கொற்றம்” என இளம்பூரணரும், “எடுத்துச் சென்ற இரு பெரு வேந்தர் படையாளர் வரவு அறியாமல், இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி, அந்நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றம்” என நச்சினார்க்கினியரும் பொருள் கூறி யுள்ளனர். அடுத்து ஊர்தல் என்ற இரு சொற்களின் இணைப்பினை ஊன்றி நோக்கும் போது, இத்துறையால் குறிக்கப் பெறும் நிகழ்ச்சியும் மண்ணாசை கொண்டு மேற்செல்லும் மன்னன் செயல்ாகவே தோன்றுகிறது; பகை நாடு நோக்கிச் செல்லும் படை, அந்நாட்டு எல்லையைக் கடந்து அக நாட்டுள் புகுந்து போரிடத் தொடங்கும் வரை, தன் நடமாட்டத்தை அக நாட்டு எல்லைக் காவற்படை அறியாதிருக்கும் வகையில் மறைக்கவே நினைப்பர்; அதனால், தலைநகரை விட்டுப் புறப்பட்டது தொடங்கியே விரைந்து வழி கடப்பார் அல்லர்; ஆங்காங்கு அமைத் திருக்கும் பகை நாட்டுக் காவல் நிலையங்கள்