பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ళీ புலவர் கா. கோவிந்தன் ஒவ்வொன்றையும் மெல்லச் சூழ்ந்து, அழித்துக் கொண்டே முன்னேற வேண்டியிருத்தலின், ஒரிடத்தை மெல்ல அடைதலும், மெல்ல மெல்ல மேலேறிப் போதலும் இன்றியமையாதனவாம். அவ்வாறு சென்று எல்லைக் காவல் நிலையங்களை இல்லாமல் பண்ணினால் ஒழிய, அந்நாட்டில் வெற்றி கிட்டாது. ஆகவே, பெரும் படைச் செலவு அத்தகையது ஆதலே வேண்டும். அதை விளக்கு வதே இத்துறை. தன் அண்டை நாட்டு மன்னன், தன் நாட்டின் மீது ஆசை கொண்டுள்ளான் என்பதை அந்நாடாள்வான் அறியான் ஆதலின், அவன் அம்மாற்றான் படையை எதிர்நோக்கியிருத்தல் இயலாது; ஆகவே, அவன் காவற் படை அறியா வகையில் கரந்து செல்வது மண்ணாசை யுடையான் படைக்கு இயலும்; ஆனால், நாட்டின் ஒரு பகுதியைத் தன் படை வளைத்துக் கொண்டது என்றதுமே, அந்நாட்டு மன்னன் தன் மீது நாற்படையை நளிைமிக விரைவில் ஏவுவன் என்பதை மண்ணாசை கொண்டு அம்மாற்றான் நாட்டில் வந்து பாடி கொண்டிருப்பவன் அறிந்து, அவன் படை வரவை எந்த நாழிகையிலும் எதிர்நோக்கியிருப்பன் ஆதலின், அவன் படையாளர் அறியாவாறு, தன் படையினை அனுப்புவது மண்ணுக்கு உரியானுக்கு இயலாது. மேலும் நாடு பறிபோகிறது என்ற நினைவே முனைந்து நிற்கும் அவன் நெஞ்சில் அப்பகைப் படையை வென்று ஒட்ட வேண்டும் என்ற விரைவு தோன்றுமேயல்லது, பையச் செல்வோம் என்ற தயக்கம் இடம் பெறாது ஆதலின், அவன் நாற்படை அவ்வாறு பகைப் படை அறியாவாறு கரந்து கரந்து பையப் பையச் செல்லாது. ஆகவே, அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம் என்ற