பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 129 இத்துறையும் மண்ணாசை கொள்வான் செயலைக் குறிப்பதே ஆகும். • . . மாராயம் பெற்ற நெடுமொழி: 'மாராயமாகிய உவகை பெற்ற நெடிய மொழி" என இளம்பூரணரும், "வேந்தனால் சிறப்பு எய்தியவதனால், தானேயாயினும், பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்; சிறப்பாவன, "ஏனாதி, காவிதி" முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலாம்” என நச்சினார்க்கினியரும் பொருள் கூறியுள்ளனர். படையில் பணிபுரிவார் பலரேயாயினும், அவர்களுக்கு அளிக்காத பெருமையை, அரசன் தனக்கு அளிக்கவே, அது அளிக்கப் பெற்ற படை வீரனுக்கு அவ்வரசன்பால் உண்மையான பேரன்பு உண்டாயிற்று. அதனால், தன் உயிரைக் கொடுத்தாயினும், அவ்வரச னுக்கும், அவன் நாட்டிற்கும் வந்திருக்கும் கேட்டினைப் போக்கத் துணிந்தான்; அவன் உள்ளத்தில் எழுந்த அத்துணிவு அவன் வாய் வழியாக வெளிப்பட்டது. காவலனைக் கண்டு களம்புக விடை வேண்டி நிற்கும் போதும், களம் புகுந்து, பகைவர் படைத் தலைவனை எதிர்ப்படும் போதும், தன் ஆண்மை ஆற்றல்களைப் பல்லாற்றானும் புகழ்ந்து கூறி, கூறியதற்கேற்பப் போர்க் களம் புக்க பலரினும் தானே சிறந்து விளங்கற்காம் வினைகளை விரும்பிச் செய்வன். "இன்னர் எனவேண்டா, என்னோடு எதிர்சீறி முன்னர் வருக முரண்அகலும்;-மன்னர் பருந்துஆர் படைஅமருள் பல்லார் புகழ விருந்தாய் அடைகுறுவார் விண்." -பு.வெ.மா. 47 வேந்தனால் சிறப்புச் செய்யப் பெற்றவர் செய்யும் செயல் இதுவாதலின், செய்யுளில் அடுத்து ஊர்ந்து அட்ட ப.த.போ.நெ-9