பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 131 பொருள் இன்று உய்த்த பேராண் பக்கம்: இதற்குப் "பகைவரைப் பொருளாக மதியாது செலுத்தின பேர் ஆண் பக்கம்” என்பது இளம்பூரணர் கூறும் பொருள். "பகை வேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதி” என்பது நச்சினார்க்கினியர் கூறும் பொருள். கொள்ளக் கருதி வந்திருக்கும் நாடு, வயல் வளமும், வற்றாப் பெருநிதியும் பொருந்திய நாடு ஆதலின், அந்நாட்டில் வன்மை மிக்க பெரும் படை இருக்கும் என்பதை அறிந்திருந்தும், தங்கள் நாட்டு இல்லாமையும், தங்கள் உடலிலும் உள்ளத்திலும் இடங் கொண்டிருக்கும் உரமும், பகை நாட்டுப் பெருங் காவல் நிலையை ஒரு பொருளாக மதியாவாயின; பசித்த நிலையில் பூனையும் புலியாக மாறிவிடும்;துன்பம் மிக மிகப் புல்லும் வில்லாகிவிடும்; பசித்த மக்கள், மலையென நிலை கலங்கா மன்னனையும் மண்ணாக்கத் துணிந்து விடுவர். இதுவே உலகியல். ஆகவே, வளம் இல்லை வாழ்வு இல்லை என்பதே காரணமாக, வளம் மிக்க வாழ்வு தரவல்ல நாட்டின் மீது படை யெடுத்து வந்துள்ளமையால், மண்ணாசை கொண்ட மன்னன் படை, அந்நாட்டு அரசனையும், அவன் பெரும் படையையும் கண்டு அஞ்சிப் புறங் காட்டிப் போய்விடாது. அவனையும் அப்படையை யும் ஒரு பொருளாக மதியாது, வெறி கொண்டு போராடி வெற்றி பெறத் துணிந்தது. அதைக் கூறுவதே இத்துறை. மண்ணாசை கொண்டு படையெடுத்தவனின் வேட்கை செயல்பட்ட நிகழ்ச்சியைக் கூறுவதே இத்துறை ஆதலின், இதுவும் மண்ணாசை உடையானுக்கு உரியது என்றே கோடல் வேண்டும். ஆக, "இயங்கு படை அரவம் முதலாக”ப் “பொருள் இன்று உய்த்த பேராண் பக்கம்”