பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இ. புலவர் கா. கோவிந்தன் ஈறாகக் கூறப்பட்ட ஏழு துறைகளும், மண்ணாசை கொண்டு மாற்றான் நாட்டின் மீது போர் தொடுப்போன் செயல்களை, அச்செயல்கள் இயல்பாகச் செயல்படும் வரிசைக் கண் வைத்து விளக்குவன என்பது புலனாயிற்று. இனிமேல் வரும் துறைகளின் இயல்பினைக் காண்போ ᎥᏝafTö; . ஒருவன் தாங்கிய பெருமை: "விசை கொண்டு வரும் புனலைக் கற்சிறை தாங்கினாற் போல ஒருவன் தாங்கிய பெருமை” என்பது இளம்பூரணம். 'தன் படை நிலை யாற்றாது பெயர்ந்த வழி, விசையோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற் போலத் தன் மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமை” என்பது நச்சினார்க்கினியம். "பொருபடையுள் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று" என்பது பு.வெ.மாலை. பெருகி வரும் வெள்ளம், கரை புரண்டு கட்டுக்கு அடங்காது, வயலும் வாழிடமும் மிக்க ஊர்களுள் புகுந்து பாழ்செய்து விடாதபடி, அவ்வெள்ளத்தின் குறுக்காகக் கட்டப்பெற்று அதன் விரைவைத் தணித்து அதைக் கட்டுப்படுத்தப் பயன் பெறுவதே கல்லணை. ஆகவே, அக்கல்லணை போல் நின்று வெள்ளம் போல் பெருகி வந்த பகைப் படையைத் தான் ஒருவனாகவே நின்று தாங்கி, அது எல்லை கடந்து போகாதவாறு பண்ணினான் எனவே, இது, மண்ணாசை கொண்டு வந்தவன் வினையைக் குறிக்காது, அவ்வாறு மண்ணாசை கொண்டு வந்தவன் வேட்கை நிறைவேறாதவாறு, அவனைத் தடுத்து நிறுத்திய அம்மண்ணுக்கு உரியவன் வினையையே குறிக்கும். சென்று தாக்கிப் பிறர் உடைமைகளைக் கைப்பற்றக் கருதுவார் வினைகளைக் கூறுங்கால் பாய்ந்து