பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 133 தாக்கினர் எனவும், தம் எல்லைக் கண் இருந்து தம் உடைமைகளைக் காப்பவர் வினைகளைக் கூறுங்கால் நின்று தாங்கினர் எனவும் கூறுவதே பொருந்தும், அதை விடுத்து முன்னவர் வினையைத் தாங்குதல் என்றும், பின்னவர் வினையைத் தாக்குதல் என்றும் கூறுவது. பொருந்தாது. இவ்விருவினைகளின் இயல்பு உணர்ந்தே, ஆசிரியர் தொல்காப்பியனார், முன்னவன் வினையைக் கூறுங்கால், அடுத்து, ஊர்ந்து, அட்ட என்ற வினை களாலும், பின்னவன் வினையைக் கூறுங்கால் தாங்கிய என்ற வினையாலும் குறிப்பிட்டுள்ளார்: தாக்குதல் வருவோன் வினை; தாங்குதல் இருப்போன் வினை. ஒருவன் தாங்கிய பெருமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டுள்ள, - "வேந்துடைத் தானை முனைகெட நெரிதர ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித் தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு ஆழி அனையன் மாதோ' - - - - என்ற புறநானூற்றுச் செய்யுட் பொருளும், "ஒரு தனி நிலை"க்கு எடுத்துக்காட்டாக வரும், - "வீடு உணர்ந்தாக்கும் வியப்பாமால், இந்நின்ற வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார் பெரும்படை வெள்ளம் நெரிதரவும், பேரா, இரும்புலி சேர்த்த இடம்" - . என்ற, புவெ. மாலைப் பாடற் பொருளும் நின்று தாங்கிய வினை, மண்காக்கும் மண்ணுக்கு உரியான் வினை ஆகும் என்பதற்கே அரண் அளித்தல் காண்க. அத்துறையின் இயல்பு இத்தகையது என்பது தெளிவாகப் புலனாகவும், இவை மண்ணாசை கொண்டு வருவானுக்கும் உரியதாகப்