பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 புலவர் கா. கோவிந்தன் தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு இரும்பனம் போந்தைத் தோடும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிரும் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவ!" என்ற முடத்தாமக் கண்ணியார் பாராட்டும் (பொருந ராற்றுப் படை 139-148), “பாண்டிநாடு பொதிய மலைப் பெருவளங்களாம் அகிலும் ஆரமும், கொற்கைத் துறை வழங்கும் வெண்முத்தும் போலும் அரும்பெரும் பொருள் களை ஆரக் கொண்டது: அஃது ஆளும் செழியனோ நனி இளையன் நாமோ மிகப் பேரரசரும் மிகப் பலருமாவர்!” என்ற நினைவால், பாண்டி நாட்டின் மீது போர்தொடுத்து வந்த சேர, சோழராம் இரு பேரரசர்களையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற சிற்றரசர் ஐவர்களையும், தன் தலைநகரப் புறத்தே தாக்கி வென்று ஒட்டியதோடு அமையாது, அவர்க்கு உரிய சோணாட்டுத் தலையாலங்கானம் வரையும் துரத்திச் சென்று வென்று, அவர்தம் வெற்றிமுரசு, வெண்கொற்றக் குடை முதலாயினவற்றையும் தனதாக்கிக் கொண்டு, அவ்வெற்றிச் சிறப்பால் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்ற சீர்மிகு பெயர் பெற்ற செழியனை, "விழுமியம், பெரியம் யாமே நம்மில் பொருநனும் இளையன், கொண்டியும் பெரிது என எள்ளிவந்த வம்பமள்ளர் - புல்லென் கண்ணர் புறத்திற் பெயர