பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 143 பெற்றதாக, மீண்டும், அவன் தன் பகைவர்பால் நிறை கொண்டதைப் பாராட்ட வேண்டுவது தேவையற்ற தாகவே, இது அவன் திறை கொள்வதைக் கூறுவதாகாது. தங்கள் நாடாளும் மன்னவன், தங்கள் நாட்டிற்கு வர இருந்த கேட்டினைப் போக்கிக் காத்தமை கண்ட அந்நாட்டு மகளிர், அவன் வெற்றிப் புகழைப் பாராட்டக் கடமைப் பட்டவராவர். அக்கடப்பாடுடைய அம்சங்கள் அவரவர்தம் நிலைக்கு ஏற்ப, அவன் புகழ்பாடும் ஆடல் பாடல்களை மேற்கொள்வர். ஆகவே, இது, வெற்றி கொண்ட வேந்தன் செயல் குறிப்பதன்று. அவ்வேந்தன் ஆட்சிக்கீழ் வாழும் மக்கள் தங்கள் புகழ்பாடும் நிகழ்ச்சியைக் குறிப்பதே ஆகும். மக்கள் மேற்கொள்ளும் ஆடல் பாடல்களில் கொற்ற வள்ளை என்பதும் ஒன்று; உலக்கைப் பாட்டு எனப் பொதுவாக அழைக்கப் பெறும் அது இளம் மகளிர் இருவர் எதிர் எதிராக நின்று உரலில் இட்ட நெல் முதலாம் பொருள்களைத் தம் கையில் பிடித்திருக்கும் உலக்கைகளால் மாறி மாறிக் குற்றுங்கால், ஒருத்தி, அப்பாட்டுடைத் தலைவனின் புகழை இகழ்வாள் புகழ, மற்றொருத்தி அவ் விகழ்ச்சியை மறுத்துப் புகழ்ந்த வாய்ப்பாட்டினாலேயே புகழ்வதாகிய அப்பாடலை மாறி மாறிப் பாடுவதாகும். "பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாடமதுரை மகளிர் குறுவரே. - வானவர்கோன் ஆரம் வயங்கியதோள் பஞ்சவன்தன் மீனக்கொடி பாடும் பாடலே பாடல்: வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்" "வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்து ஏந்து மருப்பின், இனவண்டு இமிர்பு ஊதும்