பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 145 அவ்வெற்றியில் பெரும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து, மாண்டவரின் மனைவியும் மக்களும் வாழவும், உறுப்பு நலன் அழிந்தவர் அது தீர்ந்து ஒய்வு கொண்டு இருந்து வாழவும் பெரும் பொருள் வழங்குவதும் செய்வன். அஃது அவன் கடமையும் ஆகும். ஆகவே, மன்னவன் கொற்றம் கண்டு கூத்தும் பாட்டும் மேற்கொண்டு மக்கள் ஒருபால் மகிழ, மன்னவன் அம்மக்கள் நலம் பேணும் பெரும் பணியை மேற்கொள்வது இன்றியமையாததாகவே, அந்நிகழ்ச்சியைக் கூறும் துறையும் ஈண்டு வேண்டப் படுவ தாயிற்று. முல்லைப் பாட்டின் பாட்டுடைத் தலைவனாகிய ஒரு மன்னன், அன்றைய போர் நிகழ்ச்சிகளே நினைவில் நிற்க, உறக்கம் பெற மாட்டாது, தம் காதற் பிடியானைகள் வருந்த, பகைவர் எறிந்த வேல் ஏறுண்டு வீழ்ந்து படிந்த வேழங்களை நினைந்தும், பகைப் படையைச் சேர்ந்த களிறுகளின் தொங்கும் கைகள் மலைப் பாம்புகள் போல் மண்ணில் புரளுமாறு அவற்றை வெட்டி வீழ்த்தித் தம் செஞ்சோற்றுக் கடன் கழித்து விண்ணுலகு புகுந்த வீரர்களை நினைந்தும், களத்தில் பகைவர் ஏவிய கணைகள் குனித்து ஆக்கிய புண்கள் தரும் நோயால் வருந்தி, உடல் குன்றி, உணவு வெறுத்துச் சோர்ந்து தலைதாழ்த்திக் கிடக்கும் குதிரைகளை நினைந்தும், வருத்தம் மிகுந்து, ஒரு கை, பள்ளியில் ஊன்றிக் கிடக்க, ஒரு கை, முடி விளங்கும் தலையைத் தாங்கி நிற்கச் செயலற்றுச் சிந்தை நோகும் காட்சியும், - "கண் படை பெறாஅது - எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து பிடிக்கணம் மறந்த வேழம், வேழத்துப் ப.த.போ.நெ-10