பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 இ. புலவர் கா. கோவிந்தன் பாம்பு பதைப்பு அன்ன பரூஉக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்திச் சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல்துமிபு. வைந்நூனை பகழி மூழ்கலின், செவிசாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும், ஒரு கை பள்ளி ஒற்றி ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை." பாண்டியர் பேரரசைத் தமதாக்கிக் கோடல் வேண்டும் என்ற பேராசை உந்தப் படையெடுத்து வந்த பல பேரரசர்களின் கூட்டணியை முறியடித்து வெற்றி கொண்ட தலையாலங்கானப் போர்க் களத்தில் பகைவரின் வேழப் படையினை வீழ்த்திய நிகழ்ச்சியில், புண்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரர்களைக் கண்டு ஆறுதல் - உரைத்து, அன்புரை வழங்கிவர வேண்டும் என்ற அவா முந்துற, வாடைக்காற்று வீசுவதால், தலை தெற்கே சாய்ந்து எரியும் பெரிய பாண்டில் விளக்கேந்திப் பலர் முன் நடந்து வழிகாட்ட, வேப்பந்தார்க் கண்ணியும், வேற்படையும் உடைய படைத் தலைவன் முன்னே நடக்க, பெய்யும் மழைநீர் மன்னன்மீது விழாமை குறித்து விரித்த வெண் கொற்றக் குடை ஏந்தி ஒரு வீரன் பின்னே வர, காற்றில் அலைப்புண்டு சரியும் மேலாடையை ஒரு கையில் பற்றிக் கொண்டு, வலக்கையில் வாள் ஏந்தி, செல்லும் வழியில் இருமருங்கும் நிற்கும் குதிரைகள் குளிரில் உடல் சிலிர்க்குந் தோறும், அவற்றின் மீது வீழ்ந்து வழியும் மழைத் துளிகள் சிதறித் தன்மீது விழுவதையும் பொருட்படுத்தாமல், மழையால் சேறுபட்ட மண்ணில் நடந்து சென்று வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் ஒவ்வொருவரின் பீடும் பெருமையும்,