பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 147 அவர் பெற்ற புண்ணின் பெருமையும் கொடுமையும் படைத் தலைவன் கூறிவர, அவர் உள்ளம் மகிழும் உரைகளை அள்ளி அள்ளிச் சொரிந்தவாறே, அம்மருத்துவ நிலையத்தைச் சுற்றிவரும் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் பாசறை நிலைக்காட்சியும், இத்தழிஞ்சித் துறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாதல் அறிக. "ஒடையொடு பொலிந்த வினைநவில் யானை நீள்திரள் தடக்கை நிலமிசைப் புரளக் களிறு களம்படுத்த பெருஞ்செய் ஆடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம் போந்து வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித் தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல் பாண்டில் விளக்கின் பருஉச்சுடர் அழல, வேம்புதலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறை முறை காட்டப் பின்னர் மணிப்புறத் திட்ட மாத்தாள் பிடியொடு பருமம் களையாப் பாய்பரிக் கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் 'புடைவீழ் அந்துகில் இடவயின் தழிஇ வாள்தோள் கோத்த வன்கண் காளை - சுவல்மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப நள்ளன் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” நெடுநல்வாடை 169-188,