பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இ. புலவர் கா. கோவிந்தன் மகனுக்கு வெள்ளாடை உடுத்து, வாரிமுடித்து, வேலைக் கையில் கொடுத்துச் செருமுகம் செல்க' என விடை கொடுத்தாள் ஒரு வீரத்தாய் என்ற பாராட்டிலும், அப்போர்க்களத்தில் முழங்கும் போர்ப்பறை ஒலியினை, மனைக்கண் உறையும் மடந்தையரும் கேட்கும் அண்மையில் நடந்ததே அப்போர் என்றாகி, அதுவும் தன் மண்காக்கத் தன் நாட்டு எல்லையில் நடந்த போரே ஆதல் வேண்டும் என்பதும் உறுதியாதல் உணர்க. ஆகவே, இவ்வாறு பாராட்டற்குரிய பெருவீரர்கள் மேற்கொண்ட போர்கள் எல்லாம், மண்ணாசை கொண்டு வந்தானை வென்று ஒட்டித் தன் மண் காக்க மேற்கொண்ட போர்களே ஆகும் என அறிக. ஆகவே, "ஒருவன் தாங்கிய பெருமை” முதலாக, "தழிஞ்சி” ஈறாக உள்ள துறைகள் எல்லாம், மண் காக்கும் மண்ணுக்கு உரியான் வினைகளைக் குறிப்பனவே எனக் கொள்க. பசியான் வருந்திய பாலை நிலத்து மறவர் பசி போகக் களவாடிச் சென்ற ஆனிரையை, அவ்வானிரைக்கு உரிய முல்லை நிலத்து ஆயர் மீட்டு வந்து காத்தலே வெட்சி யாகும் எனத் தொல்காப்பியர் கூறுவதே, வெட்சித் - திணையின் தொன்மை நிலையாதல் போலவே, மண்ணாசை கொண்ட மன்னவன் வந்து கைப்பற்றிக் கொண்ட தன் நாட்டின் ஒரு பகுதியை, அந்நாட்டுக்குரிய மன்னவன் வென்று மீட்டுக் காப்பதே வஞ்சி என்பதே வஞ்சித் திணையின் தொன்மை நிலையாகும். ஆனால், காலம் செல்லச் செல்ல, ஆனிரை கவர்தல் ஒரு திணை, அதை மீட்டல் ஒரு திணை என்றும், பண்டு. பழிக்கப் பெற்றதே ஆயினும், இன்று ஆனிரை கவர்வதும் பாராட்டற்கு உரியதாயிற்று என்றும், வெட்சித் திணை