பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 彎 புலவர் கா. கோவிந்தன் கடலுமாகிய அவ்விரு கடல்களுக்கும் ஒரே காலத்தில் சென்று கொணரும் அவ்விரு கடல் நீரிலேயே ஒவ்வொரு நாளும் படிந்தாடும் பெருமை வாய்க்கும் வகையில், தன் பேரரசை அவ்விரு கடல்வரையும் பெருக்கியிருந்தான் என அம்மண்ணாசையினையே பாராட்டியுளது. "கண்ணகன் வைப்பின் மண் வகுத்து ஈத்துக் கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி. , திற்றுப்பத்து பதிகம் 3 இவ்வகையால், பண்டு பழித்தற்கு உரியதாகத் தோன்றிய மண்ணாசை, பிற்காலத்தில் பாராட்டற்குரிய தாகி விடவே, சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தருள், சோழ குலத்தோனாகிய தான் ஒருவன் மட்டுமே கோலேந்துதல் வேண்டும்; ஏனையோர் இருவரும் தன் தாள் பணிந்து கிடத்தல் வேண்டும்; தன் குடை ஒன்றே, அவ்விரு குடைகளிலும் உயர்ந்து முன் செல்லுதல் வேண்டும் என்ற பேராசையுடையனாகி, அது நிறைவேறும் வண்ணம் வாழ்நாள் முழுவதும் பாசறை வாழ்க்கை யினையே மேற்கொண்டிருந்த நலங்கிள்ளி செயலும், அவன் ஆசைக்குத் துணை செய்யும் வகையில், அவன் கைப்பற்றக் கருதிய நாடு, காடுகளுக்கு அப்பாற்பட்டு நன. மிகச் சேய்மைக்கண் உளதாகவும், அச்சேய்மை கண்டு ஆங்குச் செல்ல மறுப்பதற்கு மாறாக, மனம் மகிழ்ந்து அவனுக்கு முன்னே விரையும் அவன் நாற்படைச் செலவும் பழித்தற்கு உரியவாகவும், புலவர் கோவூர்க் கிழார், பழித்தற்குரிய அவையே, அவன் பெருமையைப் புலப் படுத்தும் பாராட்டிற்குரிய பண்புகளாம் எனக் கொண்டு அவை கூறி அவனைப் பாராட்டியுள்ளார். இவ்வகையால் வஞ்சி ஒழுக்கம் உடைய வேந்தன் செயலோடு முற்றிலும்