பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இ. புலவர் கா. கோவிந்தன் குறிஞ்சி நில வாழ்வின் போது உண்டாகவில்லை. ஆனால், அந்நிலை நெடிதுநாள் நிற்கவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல, மக்கள் தொகை மட்டும் பெருகிக் கொண்டே வந்ததாக, அவர்க்கு வேண்டும் உணவுப் பொருள்கள் பெருகவில்லை. அதற்கு மாறாக அம்மக்கள், அவ்வுணவுப் பொருள்களைத் தொடர்ந்து தின்று கொண்டே வந்தமையால், சிறுகச் சிறுகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் கிடைப்பது அரிதாகி விட்டது அந்நிலை உண்டாகவே, அம்மக்களுள் சிலர் உணவுதேடி, அம்மலை யகத்தை விடுத்து வெளியேறினர். அவ்வாறு வெளியேறிய மக்கள், அடுத்துச் சென்ற இடம், மலைநாட்டிற்கும், காட்டு நாட்டிற்கும் இடைப்பட்டதான பாலை நிலமாகும்; அப்பாலை குறிஞ்சியினும் வளம் குறைந்ததாகவே, அந் நிலத்துட் புகுந்தார் அனைவர்க்குமே அதுவாழ்வளிக்காது என்பது உணர்ந்து, ஆண்டு ஒரு சிலர் மட்டுமே இருந்துவிட, ஏனையோர் அப்பாலையைக் கடந்து முல்லை நிலம் புகுந்தனர். முல்லை, பாலை போலாது, ஓரளவு வாழ வாய்ப்பளிக்கும் நிலமாகவே, அந்நிலம் புக்க மக்கள், ஆங்கே நிலையாக வாழத் தொடங்கினர். குறுங்காடுகளை அழித்துப் புன்செய்ப் பொருள்களை விதைத்து விளைத்தனர்; ஆடு, மாடு, எருமைபோலும் உயிர்களைப் பேணி வளர்த்துச் சுவை தரும் பால் பயன் கொண்டனர். அதனால், பொதுவுடைமை நிலை மறைந்து தனிவுடைமை நிலை இடம் பெற்று விட்டது. - முல்லைநிலம் புகுந்த மக்கள்நிலை, இவ் வகையால், ஓரளவு அமைதியுடையதாக, குறிஞ்சியை விட்டு அவரோடு புறப்பட்டுவந்து, இடைநிலமாம்பாலையில் தங்கி விட்ட மக்கள், அப்பாலை, எதுவும் விளையாப் பாழ்