பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ: 157 பெயரை அளித்ததைப் போலவும், வஞ்சி தும்பைத் திணைகளிலும், அவற்றின் மறுதலைத் திணைப் பெயர்களை வழங்கியிருத்தல் வேண்டும்; ஆனால், அவ்வாறு அவர் வழங்கவில்லை ஆதலாலும், மண்ணாசை கொண்டு வரும் வஞ்சிக்கு எதிராக எடுக்கும் மண் காக்கும் நிகழ்ச்சியைக் குறிப்பதாகப் பிற்கால ஆசிரியர்கள் கொண்ட காஞ்சி என்னும் பெயரை, நிலையாமை உணர்த்தும் திணைக்குச் சூட்டி விட்டமையாலும், வெட்சிக்குக் கரந்தை, வஞ்சிக்குக் காஞ்சி, உழிஞைக்கு நொச்சி என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மறுதலை நிகழ்ச்சி உண்டு என்பதே ஆசிரியர் கருத்து ஆகுமாயின்தும்பைக்கும் ஒரு மாறுதலை நிகழ்ச்சியை அளித்திருத்தல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனாரும் அளிக்கவில்லை; முன்னவை மூன்றும், இரண்டு இரண்டாகப் பிரிந்தே நிற்கும் எனக் கொண்ட பிற்காலப் புறப்பொருள் ஆசிரியர்களும், அப்பிரிவைத் தும்பைக்கண் கண்டார் அல்லர் ஆதலாலும், எதிர் ஊன்றலை உணர்த்துவதே காஞ்சி என்ற கொள்கையிலும் பிற்கால ஆசிரியர் களிடையே ஒருமைப்பாடு இல்லை; ஒரு சிலர் மட்டுமே அது எதிர் ஊன்றலை உணர்த்துவதாகக் கொள்ள, ஏனையோர் எல்லாம் அது நிலையாமை உணர்த்துவ தாகவே கொள்வர் ஆதலாலும், எதிர் சேரல் காஞ்சி என்பரால் எனின், காஞ்சி என்பது எப்பொருட்டும் நிலையாமை கூறுதலின், பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியல் பொருண்மைப் பெயரால் கூறலாகாமை உணர்க' என்ற நச்சினார்க்கினியரின் மறுப்பை ஈண்டு உணர்க. (புறத்திணை: 7 உரை) w