பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 161 தொல்காப்பியப் பொருளதிகார அகத்தினை இயலின்கண், ஆசிரியர் நச்சினார்க்கினியர், "வினைவயின் பிரிந்து மீள்வோன் விரைபரித்தேர் ஊர்ந்து பாசறையி னின்றும் மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉம் காலம் ஆவணியும் புரட்டாசியும் ஆதலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி, ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின், களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடு இன்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானும், பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலாம் முல்லைக்குக் கார்காலம் உரித்தாயிற்று. புல்லை மேய்ந்து கொல்லேற்றோடே, புனிற்றாக் கன்றை நினைத்து மன்றிற் புகுதரவும், தீங்குழல் இசைப்பவும், பந்தர் முல்லை வந்து மணங் களுற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று," எனக் கூறும் விளக்கத்தால். தலைவன் மீளும் காலமே கார்காலம், அக்காலமே மீட்சிக்கு ஏற்புடைய காலம் என்பது அவர் கருத்தாதல் புலனாயிற்று. நச்சினார்க்கினியர் கூறும் இக்கருத்தினை. "வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத் தண்பெயல் பொழிந்த பைதறு காலைக் குருதி உருவின் ஒண்செம் மூதாய் பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப், பைங்கொடி முல்லை மென்மதப் புதுவி வெண்களர் அரிமணல் நன்பல தாஅய் ப.த.போ.நெ-11