பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ல் புலவர் கா. கோவிந்தன் வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில் கருங்கோட்டு இரலை காமர் மடப்பினை மருண்டமான் நோக்கம் காண்தொறும் நின்நினைந்து திண்தேர்வலவ! கடவு, எனக் கடைஇ இன்றே வருவர் ஆன்றிகம் பணி -அகம்: 74 என்ற, தலைவியை ஆற்றுவிக்கும் தோழியின் கூற்றும், "வந்துவினை முடித்தனன் வேந்தனும், பகைவரும் தந்து திறைகொடுத்துத் தமர் ஆயினரே, முரண் செறிந்திருந்த தானை இரண்டும் ஒன்றுஎன அறைந்தன. பனையே நின்தேர் முன்இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது ஊர்க பாக." -அகம்: 44 என்ற, வினைமுடித்த தலைவன் தேர்ப்பாகனுக்குக் கூறும் கூற்றும் உறுதி செய்கின்றன. இவ்வகையால் நாடு காவல் போலும் வினைமேற்கொண்டு பிரிந்து சென்ற தலைவன், வினை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் காலம், கார்காலமாகும் என்பது உறுதியாயிற்று. 'கிழவி நிலையே வினையிடத்து உரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்" என்பதற்கு ஏற்ப, காதலை மறந்து கடனாற்றிய தன் பயனாய் வினையில் வெற்றி கண்ட பின்னர், அது காறும் மறைந்திருந்த காதல் வெளிப்பட்டு ஆட்சி புரியுமாதலின் வினைமுடிவுற்றதும் வீடு திரும்ப விரைவன் என்பது இயல்பாயிற்று. அவ்வாறு அவன் வீடு திரும்பும் காலம் கார்காலம் என்பது உறுதியாகவே, அவன் வினையாற்றும் காலம், அக்கார்காலத்திற்கு முன்னதான, இளவேனில், முதுவேனில் பருவங்களாகிய சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி மாதங்களாகுமே யல்லது, மீண்டு வரும் கார்காலமாம் ஆவணியும், புரட்டாசியும் ஆதல்