பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நொச்சியும் உழிஞையும் பிண்ணாசை கொண்டு அண்டை நாட்டு அரசனோடு போரிடப் போன ஓர் அரசன், போரை விரும்பி மேற்கொண்டவனாதலின், அப்போரை மேற் கொள்வதன் பின்னர்த் தன்வலி, மாற்றான்வலி, தனக்கு ஆகும் காலம், மாற்றானுக்கு ஆகும் காலம், தனக்கு வாய்ப்புடைய இடம், மாற்றானுக்கு வாய்ப்புடைய இடம் ஆகியவற்றைப் பல முறை ஆராய்ந்து ஆராய்ந்து, தன்வலி மிக்க நிலையில், தனக்கு ஏற்புடைய காலத்தில், வாய்ப் புடைய இடமாக நோக்கிப் போர் தொடங்கியிருப்பன். ஆனால், அவன் பகைவனாகிய மண்ணுக்குரிய மன்ன வனோ எனில், அத்தகைய முன்னேற்பாடுகளோடு போர்க் களம் புகுந்தவனல்லன். பகையரசன் படை தன் நாட்டுள் புகுந்து தன் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது என்பதை அறிந்தவுடனே, அப்படையை விரட்டித் தன் நாட்டை வாழ்விக்க வேண்டும் என்ற எண்ணமே முன்னிற்க, விரைந்து களம் புகுந்தவனாதலின், அந் நிலையில் தன் படைபலம் யாது? பகைப் பலம் யாது? தனக்கு ஏற்புடைய காலம்தானா? தனக்கு வெற்றியளிக்க வாய்ப்புடைய இடந்தானா என்பனவற்றையெல்லாம்