பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இ. புலவர் கா. கோவிந்தன் பேராற்றங்கரைகளில் அமைத்தார்கள். நனிமிகப் பழைய நாகரிகம் உடையவாகிய எகிப்து நாட்டு நகரங்கள் நைல் நதியின் கரையில், மெசபடோமிய நாகரிகத்தை நாட்டிற்கு நல்கிய நகரங்கள் டைகிரஸ், யூப்ரடஸ் ஆற்றங்கரைகளில், திராவிட நாகரிகத்தின் தொன்னிலங்களாகிய மொகஞ்ச தாரோ, அரப்பா நகரங்கள் சிந்து நதிக் கரையில், உலகம் புகழ் இலண்டன் மாநகரம் தேம்ஸ் நதிக்கரையில், உலகப் பழம் பெரும் பேரூர்களாம் இவற்றைப் போலவே, சேரநாட்டுத் தலைநகராம் கருவூர் பொருநையாற்றங் கரையிலும், சோணாட்டுத் தலை நகர்களாம் உறையூரும் புகாரும் காவிரிக் கரையிலும், பாண்டி நாட்டுத் தலை நகராம் மதுரை வைகைக் கரையிலும், பல்லவப் பேரரசின் அரசிருக்கையாம் காஞ்சி மாநகர் பாலாற்றங்கரையிலும் அமைந்திருத்தல் அறிக. ஒரு நாட்டையும், அந்நாட்டின் தலைநகரையும் சூழ, நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என்ற அரண்கள் நான்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது சாலவும் நன்று என்பதே பழந்தமிழ்ப் பெரியார்கள் கண்ட அரண் அமைப்பு முறையாகும். “மணி நீரும் மண்ணும், மலையும் அணிநிழல் காடும் உடையது அரண்” என்ற வள்ளுவர் வாய்மொழியினைக் காண்க. "கான் அரணும் மலை அரணும், கடல் அரணும் சூழ்கிடந்த கலிங்க பூமி” என அவ்வியற்கை யரண்களே எடுத்துப் பாராட்டப் பெறுதலும் காண்க. இவ்வரண் அமைப்பு முறையினைக் கருத்தில் கொண்டு எளிதில் கடந்து செல்லலாகாவாறு, எக் காலத்தும் கரை புரண்டு ஒடும் வெள்ளம் உடையவாகிய பேராற்றங் கரைகளிலேயே தங்கள் தலைநகர்களைக் கண்ட தமிழ் நாட்டுப் பேரரசர்கள், அவ்வாறுகள்