பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 171 காவற்காட்டின் கடத்தற்கு அருமையினை "நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல் முதிர் புறங்காட்டன்ன பல்முட்டு” (அகம்: 122) எனப் பரணர் பாராட்டியுள்ளமை உணர்க. இவ்வாறு காவற்காடும் ஓர் அரணாகி விடவே, படை யெடுத்து வரும் பகையரசர், அக்காவற்காட்டினை அழிப்பதனையே முதற்கண் மேற்கொண்டனர். கருவூர்க் கோட்டையை வளைத்துக் கொண்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், அக்கோட்டையின் காவற் காட்டினை அழிக்கவும் அக்கோட்டைக் காவலன், அதைத் தடுக்கவும் நினைக்காது, அரணகத்திலேயே அடங்கி யிருந்தமை கண்டு, வேந்தே! தம் காவற் காட்டின் அழிவு கண்டும் வாளாகிடப்பது வேந்தர்க்கு அழகன்று" என்ற ஆலத்துர்க் கிழார் அறிவுரை, காவற் காட்டின் அருமை பெருமைகளை அறிவிப்பது அறிக. w "காவு தொறும் கடிமரம் தடியும் ஒசை தன்னுர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நானுத்தக வுடைத்தே" -புறம் 36. பெருநீர்ப் பரப்பினைக் கடக்கும் துணையாகப் புணையும் தெப்பமும் போல்வன அல்லது பிற எதுவும் காணாப் பழங்காலத்தில் நீர் அரண், நனிமிகச் சிறந்த அரனாகக் கருதப்பட்டது. நீர் அரண், நில அரண், மலையரண், காடு அரண் என்ற நால்வகை அரண்களுள், வள்ளுவர் நீர் அரணையே முதற்கண் கூறியுள்ளார் எனினும், பெருங்கடலும், பேராறும் போலும் அரண்கள் எல்லா நாடுகளுக்கும் எல்லா நகரங்களுக்கும் அமைதல்