பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஒ புலவர் கா. கோவிந்தன் "அளிதோ தானே பாரியது பறம்பே ! நளிகொன் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே, அணிநிற ஒரிபாய்தலின் மீதழிந்து திணிநெடும் குன்றம் தேன்சொரி யும்மே; வான்கண் அற்று அவன் மலையே வானத்து மீன்கண் அற்று அதன்சுனையே, ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும், தாளிற் கொள்ளலிர், வாளில் தாரலன்!” -புறம் 109. காவற் காட்டை அழித்து, அகழியைத் துார்த்து, அவற்றைக் காத்து நின்ற புறநகர் வீரர்களை வென்று நிற்கும் - பகைவர் படையால் பாழுற்றுப் போகாவாறு நகரத்தையும், நல்ல அரணையும் காத்து நிற்பது மதில் ஒன்றே. அதனால் அம்மதில் பகைவர் படையால் எளிதில் அழிவுறாது நெடிது நாள் நின்று தாங்கவல்ல வன்மையுடையதாதல் வேண்டும் என்பதையும் தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள். பகைவர் படை, மதிலை ஏணியிட்டு ஏறியும், அடியைத் தகர்த்தும், அறவே இடித்தும் அரணுட் புக முற்படுவர். அதனால், மதில், ஏணியிட்டும் ஏறமாட்டா உயர்வும், அகழ்ந்து கடக்க லாகா அடி அகலமும், இடித்துத் தகர்க்கலாகாத் திண்மையும் உடையதாதல் வேண்டும். அகத்தோர் ஊக்கமும் உள்ளுரவும் உருக்குலைந்து போகும் வகையில், அரண் முற்றுகை நீண்டு செல்லும் வகையில், புறத்தே பகைவர் படையை விட்டு வைப்பது போர் முறையாகாது. ஆகவே, புறப்படையை அகத்திருந்தவாறே சிறுகச் சிறுக