பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒ. புலவர் கா. கோவிந்தன் அவ்வானிரைகளைக் காப்பதற்கு என்றே ஒரு தலைவனைத் தேர்ந்து கொண்டனர்; அவ்வகையால் உருப்பெற்றதே அரசு நிலை. அவ்வாறு தலைவனாகப் பெற்ற அரசன், ஆனிரை காப்பதைத் தன் தலையாய கடமையாக் கொண்டு காத்து வந்தான்; முல்லைநிலத்தில் இடம்பெற்ற இப்புது நிலையைக் கண்ட பாலை நிலத்துமறவரும், தமக்கு வேண்டும் அவ்வானிரைகளைக் கொண்டு தருவதற் கென்றே ஒரு தலைவனைத் தேர்ந்து, தமக்கு அரசனாக்கிக் கொண்டனர்; இவ்வகையால், பாலை நிலத்து மறவர்க்கும் முல்லை நிலத்து ஆயர்க்கும் இடையே தோன்றிய போர் பாலை நிலத்து அரசனுக்கும் முல்லை நிலத்து அரசனுக்கு மிடையே நடைபெறுவதாகமாறி, மேலும் சில காலம் கழிந்த விடத்து அடுத்து அடுத்து அரசோச்சும் இரு நாட்டு அரசர்களுக்கு இடையே நடைபெறும் தொடக்கப் போராக மாறிவிட்டது. நிற்க, - . மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உயர, அவர் தம் ஆடைகளும் பலவாயின; வயிற்றின் பசி தீர்த்த பின்னர், மக்களுக்கு வேறுபல பொருள்கள் மீது ஆசை மிகுந்தது. அவ்வாசைகள் பலவாயினும், அவற்றைப் பொன் ஆசை மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்று பிரிவினுள் அடக்கி விடலாம். பகைநாட்டு ஆனிரைச் செல்வங்களைக் கொள்ளையிட்டு வரல் காரணமாகவும், அதைக் காத்தல் காரணமாகவும், மேற்கொண்ட முதற்போர், பொன்னாசை காரணமாம் போரின் முதல் நிலையாம்; அப்போர் நிகழ்ச்சிகளால் உணவுக் குறைபாடு தீரவே, அதை அடுத்துப் பொன்னும் பொருளும் போலும் பொருள் காரணமான போர் நிகழும்; அதை அடுத்து அந்நாட்டு அழகு மகளிரை அடைவதற்காம் போர் நிகழும்; அதை