பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 177 அழிப்பதையும் அகப்படை மேற்கொள்ளுதல் வேண்டும். அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புறத்தே பாடி கொண்டிருக்கும் பகைப் படைக் கண்ணில் படாது, மதிலின் உச்சிக்கண் ஒளிந்திருந்து அம்பேவிப் போர் புரிதற்கு ஏற்ப, அம்மதில் தலையகலம் உடையதாதலும் வேண்டும் என்பன போலும் அரண் அமைப்பு முறை களையும் உணர்ந்து அரண் அமைத்து வாழ்ந்தார்கள். "உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல்" என்பது வள்ளுவர் வகுத்த அரண் அமைப்பு விதி. மதிலின் இத்தகைய அமைப்பு முறையினையும் மதியாது, பகைவர் படை, அம்மதில் அழிவில் வெற்றி காண்பதும் ஒரோ வழி நிகழ்ந்து விடும் என்பதையும் பழந்தமிழ்ப் பேரரசர்கள் உணர்ந்திருந்தமையால், அது மேற்கொள்ளும் பகைவர் படையை அந்நிலையிலும் அழித்தொழிக்க வல்ல ஆற்றல் அம்மதிலுக்கு இருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து ஆட்கள் இயக்க இயங்காது தாமே இயங்கிப் பணிபுரியவல்ல அரிய பொறிப்படைகள் பலவற்றை அம்மதிலெங்கும் அமைத்து இருந்தார்கள். தானே வளைந்து அம்பேவும் வில்; குரங்குருவில் இருந்து குறுகுவாரைக் கடித்துக் கொல்லும் பொறி, கல் உமிழ் கவண் உருகக் காய்ந்து சேர்ந்தார்மீது சிதறித் துன்புறுத்தும் நெய் கொதிகலன்; உருகிய செம்பைப் பகைப் படைமீது ஊற்றும் செம்புருக்கு உலை; இரும்பை உருகக் காய்ச்சி உட்புக முனைவார் உடல்மீது ஊற்ற ஏற்று நிற்கும் இரும்புருக்கு உலை. கவணிற்கு வேண்டும் கற்களைத் தாமே இடுவதும் தேடுவதும் செய்யும் கல்இடு கூடை, துரண்டில்போல் தோன்றி, மதிலை அணுகுவாரைப் பற்றி ப.த.போ.நெ-12